தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

!!!!!!!!!!!!!!Thanikai Puranam!!!!!!!!!!!!!!

சீர்தரு துறைசை வாழ்சிவ ஞான
     தேவன்மா ணாக்கருண் முதன்மை
  திகழ்ந்துள கச்சி யப்பமா முனிவன்
     திருப்பெருங் காஞ்சியி லெய்திச்
சேர்தரு மடியார் தமதக விருளைத்
     தினகரன் முன்னிரு ளென்னத்
  திருந்துதன் னருளா லகற்றிவீ டுறுத்திச்
     சிறந்தபூ ரணமடைந் தனனே."

எனவருஞ் செய்யுளால் உணர்க.

இனி, இப்புலவர் பெருமான் இத்தணிகைப் புராணமேயன்றி, திருவானைக்காப் புராணம், பூவாளூர்ப் புராணம், பேரூர்ப் புராணம், விநாயக புராணம், காஞ்சிப் புராணம் (பிற்பகுதி), சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ், கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது, ஆனந்த ருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி, திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி, பஞ்சாக்கரவந்தாதி, திருத்தணிகையாற்றுப்படை, என்னும் அரிய வேறு பல நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் புகழ் விரிப்பினகலும் தொகுப்பின் எஞ்சும்.

வாழ்க கச்சியப்ப மாமுனிவர் வண்புகழ் !
வாழ்க செந்தமிழ்மணிமொழி வாழியவே.

மேலப்பெருமழை                                   இங்ஙனம்,

18 - 1 - 1965                         புலவர். பொ. வே. சோமசுந்தரன்.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-02-2019 11:46:43(இந்திய நேரம்)