Primary tabs
யவர்களின் துதி இவற்றுக்குப் பின்னர், பெரியார்களைப் போற்றும் வரிசையில்,
கலீபா உமறுஅவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள விவரங்கள்,
சரித்திரத்துடன் பொருந்துவனவாயில்லை. கலீபா உமறுஅவர்கள், முறை தவறி
நடந்த தம் மகனையும் தம் சிறியதந்தையையும் வதைத்தார் என்று
சொல்லியிருக்கின்றார். ஆனால், அவ்வாறு சொல்லியவர், அவர்கள்
அத்தகைய கொடூரமான தண்டனையை அடைவதற்குச் செய்த குற்றம்
இன்னதென்பதைக் குறிப்பிடவில்லை. சரித்திரத்தில், கலீபா உமறுஅவர்கள்
எவருக்கும் அவ்வாறு தண்டனை விதித்ததாகச் சொல்லப்படவில்லை. எனினும்,
கட்குடி முதலிய ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்தவர்களுக்கு
மார்க்கசட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தண்டனையை அளிப்பதில் அவர்
எள்ளளவும் பின்வாங்குவதில்லை. அக் கலீபாவினால், இஸ்லாமிய ராஜ்யத்தில்
ஆங்காங்கு மாகாணக் கவர்னர்களாய் நியமிக்கப்பட்டிருந்தவர்களும்
மதுபானம் செய்த காரணத்தினால் கவர்னர்கள் பதவியினின்றும்
நீக்கப்பட்டிருக்கின்றார்கள். தம் மகனும், உரிமைத் தோழர்களும் சாராயம்
குடித்ததற்காகச் சவுக்கடி பெறவேண்டுமென்று கட்டளையிடக் கலீபா சற்றும்
தயங்கவில்லை. ஒருவாறு சவுக்கடியால் மகனார் இறந்து விட்டதாகக் கருதி
நூல்ஆசிரியர் குறிப்பிட்டிருக்கவுங் கூடும்.
மேலும், அபூபக்கர், உதுமான், அலி என்னும் கலீபாக்களைப் போற்றிப்
புகழும் வரிசையில் கூறப்பட்டுள்ளவை இஸ்லாத்திற் பிறந்து வளர்ந்து,
மரபறிந்த ஒரு புலவர் சொல்லும் வகையில் அமைக்கப்படவில்லை. இந்து
மதம், கலைப்பயிற்சி, நாகரிகம் முதலியவற்றோடு சம்பந்தப்பட்ட
செய்திகளைக் கூறும்போது, அவை கற்றறிந்த தமிழ்ப் புலவர் எழுதுகிற
முறையிற் காணப்படுகிறது. ஆதலின் இந் நூலாசிரியர் இஸ்லாம் மதத்தைத்
தழுவு முன்னர், இந்துமத நூல்களில் மிக்க பயிற்சி பெற்றவர் என்பது
ஆங்காங்குள்ள சொற்பிரயோகங்களாலும், உவமைகளாலும் விளங்குகிறது.
கடவுள்வாழ்த்தும், பெரியார்வணக்கமும், குருவணக்கமும் தொடக்கத்திற்
செய்து நூலை எழுதுவது தமிழ்மரபு. இதைப் பின்பற்றியே பண்டைத்
தமிழ்முஸ்லிம் புலவர்களும்