Primary tabs
தங்கள் நூலை இயற்றிவந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இந்துநூல்களிற் கண்ட கருத்துக்களைக் கையாண்டார்கள். ஆனால்,
இக்கால முஸ்லிம்புலவர்களிடையே இம் முறைகளைக் காண்பது அரிதாயுளது.
இந்த நாடகத்தில் காணப்படும் நொண்டி, ஈமான்கொண்டு இஸ்லாத்தைத்
தழுவி ஹஜ்யாத்திரை செய்து மதினா சென்று அங்குத் தூங்கி யெழுந்ததும்,
வெட்டப்பட்ட கை கால்கள் வளர்ந்தன என்று சொல்கிறான்.
தென்னிந்தியாவில் தொன்று தொட்டு இஸ்லாமியப்பிரசாரம் சமாதான
முறையிலேயே, கற்று முதிர்ந்த பெரியோர்களால் செய்யப்பட்டு வந்தது ;
அங்ஙனம் எவ்விதப் பலவந்தமும் இல்லாமல் மார்க்கத்திற் சேர்ந்தவர்கள்
நன்னெறி பூண்டு தம் வாழ்நாளைக் கழித்ததுமல்லாமல், சாத்விக
முறையிலேயே மார்க்கத்தைப் பரவச் செய்து வந்திருக்கிறார்கள்.
நூல்கள்மூலமாகவும் அப் பிரசாரம் நடந்தது என்பதற்கு இந்தச் ‘செய்தக்காதி
நொண்டி நாடகம்’ என்ற நூலே சான்றாகும். ஏனெனில், இஸ்லாத்தைத்
தழுவுவதனால் உண்டாகும் அதிசயநன்மைகள் இதிற் கூறப்படுகின்றன.
ஆகவே, இதை ஓர் இஸ்லாமியப் பிரசார நூல் எனக் கொள்ளுவதற்கு
இடமிருக்கிறது.
நொண்டி கூறும் வரலாறு
நான் அழகர் மலைக் கள்வன். என் பெயர் ஒடுங்காப்புலி என்பது.
என் தந்தை, ‘கல்லாவிற் பால் கறப்போன்’. அவன்பெயர் வணங்காப்புலி
என்பது. நான் குலவித்தைகள் பலவற்றையும் வகையாய்த் தெரிந்தபின்பு,
சொக்கரைச் சேவிக்க மதுரை சென்றேன். அங்கு ஒரு தாசிவலையி லகப்பட்டு,
இருந்த பொருள்யெல்லாம் பறிகொடுத்தேன். பின்னர் அவள் ‘சின்னச் சிறை’
வேணுமெனச் சொன்னாள். அதற்குடன்பட்டு, மதுரையைவிட்டு வெளியேறித்
திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி என்னும் ஊர்களைக் கடந்து சீரங்கம்
சென்றேன். அங்கு வேறொரு கள்ளனும் வந்து சேர்ந்தான். இருவரும் கூடிப்
பேசினோம். நான் ஒரு தாசிவீட்டில் நுழைந்து, அவள் தூங்கும்போது
அவள்நகைகளையெல்லாம் கழற்றிக்