தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

யெடுத்து அவிழ்த்து விரைந்து கையிட்டு அள்ளித் தம் வாயில் ஒருபிடி அவலைப்
போட்டனர். மென்று தின்று தின்று சுவைகண்டு மெச்சி எனக்கு இத்தகைய அவலில்
விருப்பம் உள்ளதென்று எங்ஙனம் தெரிந்தாய். இதற்கொப்பான அவலை நான்
எப்போதும் எவ்விடத்தும் கண்டதில்லை என்று சொல்லி மீண்டும் ஒரு பிடி
அவலை எடுத்து வாயில் போடப் போகும் பொழுது பக்கமிருந்த உருக்குமணிதேவி
திடீரென்று கையைப் பிடித்துக் கொண்டாள். இது கேட்ட பரீட்சித்து மன்னன்,
சுகமுனிவரிடம் மனைவி இங்ஙனம் தடுப்பது தகுதியா? என்று வினவ, முனிவரும்
"அங்ஙனம் அவள் செய்தது தகுதியானதே, குசேலருக்கு வேண்டுவது குறையாத
செல்வந்தானே, இரண்டாவது பிடி அவலும் கண்ணன் உண்டால் குசேலருக்குப்
பெருஞ் செல்வம் வருவதுடன் கண்ணனும் அவருக்குப் பணிவிடை செய்யும்
அளவிற்கு வந்து விடுவார் என்ற கருத்துட்கொண்டே தடுத்தனள்" என்றார்.

பின்னர்க் குசேல முனிவரைப் பஞ்சணைப் பள்ளியில் துயில் உறச் செய்தார்.
அவரும் உறங்கி எழுந்து காலைக் கடனை முடித்துக் கொண்டு, தமக்கெல்லாப்
பொருளும் கிடைத்தன போல் நினைத்து ஊருக்குப் புறப்படலானார். கண்ணபிரான்
அதுகண்டு அவர் முன் விரைந்து வந்து அடி பணிந்து சிறிது தூரம் நடந்து வழி
அனுப்பி விடை பெற்றுத் தம் கோயிலுட் புகுந்தார். ஊரிலிருந்து வந்த
கோலத்துடனேயே வெறுங்கையனாய்ப் பரிசொன்றும் பெறாது செல்கின்ற குசேலர்
நிலைமை கண்டு இரங்கினர் பெண்கள் பலர்; கண்ணன் தம்மைத் தேடி வந்த
நண்பருக்குப் பொன், பொருள், ஆடை முதலியன கொடுத்துச் சிறப்பித்து
அனுப்பாதது அவர் பெருந்தன்மைக்குக் குறைவாகும்; நல்ல முறையில்
மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஏன் இங்ஙனம் அனுப்பினர் ;
என்பன போன்ற பல மொழிகளைத் தங்கள் தங்கள் நினைப்புக்குத் தகுந்தவாறு
பேசலானார்கள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:51:26(இந்திய நேரம்)