தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

இராதை:- கண்ணன்பாற் காதல் கொண்டு கூடிக்கலந்த அன்பிற் சிறந்த
காதலியரில் ஒருத்தி. கண்ணனுக்கு மாமி முறையுறவுடையாள். (685)

இராவணன்:- இலங்கை மன்னவன்; இருபது கரமும் பத்து முகமும்
உடையவன்; வானவர் அசுரர்களால் அழியாத வரம் பெற்றவன்: மூன்றுலகத்தினும்
தனக்கு நிகரில்லா வலிமை பெற்றவன் மூன்றரைக் கோடி யாண்டு வாழ்நாள்
வேண்டுமெனக் கேட்டுப் பெற்றவன். சீதையைச் சிறை வைத்தவன்; இராமனாற்
கொல்லப்பட்டவன். (674)

இரேணுகை:- சமதக்கினி என்ற முனிவனுடைய மனைவி பரசுராமனைப்
பெற்ற தாய்; சமதக்கினியின் ஆணைப்படி பரசுராமனால் வெட்டுண்டிறந்து,
மீண்டும் சமதக்கினி முனிவனால் எழுப்பப்பட்டவள். (667)

இலக்கணை:- மத்திர தேசத்தரசன் மகள்: கண்ணன் காதலியருள் ஒருத்தி (699)

உக்கிரசேனன்:- வடமதுரையை யாண்ட மன்னன். கஞ்சனுடைய தந்தை;
தேவகனுக்குத் தமையன்; யதுகுலத்திற் பிறந்தவன்; கஞ்சனாற் சிறை
வைக்கப்பட்டுப் பின் கண்ணனால் சிறை வீடு பெற்றவன். (687)

உத்தவன்:- யதுகுலத்தில் உதித்தவன்; வாசுதேவனுக்குத் தம்பியாகிய
தேவபாகன் மைந்தன்; கண்ணனுக்கு அமைச்சனாக இருந்தவன். (689)

உருக்குமன்:- உருக்குமணியின் உடன் பிறந்த தமையன் உருக்குமணியைக்
சிசுபாலனுக்கு மணம் புரிந்து கொடுக்க முயன்றவன்; கண்ணன் தன்மேற் காதல்
கொண்ட உருக்குமணியை கவர்ந்து செல்ல அவனோடு எதிர்த்துப் போர் புரிந்து
அவனாற் சிகையறுப் புண்டு சென்றவன். (692)

உருக்குமணி:- விதர்ப்பநாட்டு வேந்தன் மகள்; கண்ணன் மேற் காதல்கொண்டவள்;
கவுரிபால் வரம் வேண்டிப் பெற்றவள்; தன் தமையன் உருக்குமன் சிசுபாலனுக்குத்
தன்னை மணம் பேசியிருப்பதையறிந்து, கண்ணனுக்குத் தூது விடுத்துக் களவாக
வந்து, பூஞ்சோலையில் இருந்து கண்ணன் கவர்ந்து செல்ல உடன் வந்து மணம்
புரியப்பட்டவள். (692)

உரோகிணி:- வாசுதேவனுடைய இளைய மனைவி; பலராமனை யீன்ற தாய்;
தேவகியின் மாற்றாள். (675)

கஞ்சன்:- உக்கிரசேனன் என்ற வடமதுரை மன்னன் மைந்தன்; தேவகியுடன்
பிறந்தவன்; கண்ணனுக்குத் தாய் மாமன்;


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:53:19(இந்திய நேரம்)