தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM-பெயர் விளக்க அகரவரிசை

பெயர் விளக்கம்
[எண்-பாட்டெண்]

அக்குரூரன்:- விருட்டினிகுலத்தில் சுவபக்குவன் என்பவனுக்கு முதற்
புதல்வனாகத் தோன்றியவன்; சாத்தகியின் தாயத்தாரிலொருவன்; கஞ்சனுக்கு
முதலமைச்சன்; கண்ணன்பால் என்றும் நீங்கா அன்புடையவன். (689, 696)

அசுவினிதேவர்:- துவட்டாவின் மகள் சஞ்ஞிகைக்கும் சூரியனுக்கும்
புதல்வர்களாகப் பிறந்தவர்; அழகிற் சிறந்தவர்; வானுலகமெங்கணும் திரிவோர்;
வானவர்க்கு மருத்துவராய்ப் புகழ் பெற்றவர்; சியவனர் புரிந்த வேள்வியில்
வழங்கிய அவியை முதலிற் பெற்றவர்; பின் எவர் வேள்வி புரியினும் ஆங்கு
வந்து அவி பெறுந் தகுதியுடையவர். (602)

அசோதை;- நந்தகோபன் என்ற பொதுவர் குலத்தலைவன் மனைவி;
கண்ணனை வளர்த்த தாய்; தான் பெற்ற பெண் குழந்தையை வாசுதேவன்
எடுத்துக்கொண்டு செல்ல, அதனையும் அறியாமல் உறங்கி விழித்துக்
கண்ணனையே தன் குழந்தையாகக் கண்டவள். (4(பா), 677)

அதிதி:- தக்கன் மகள்; காசிப முனிவனுடைய மனைவி; மாவலியை யீன்ற
தாய். (666)

அனுமன்:- காற்றுத் தெய்வத்திற்கு அஞ்சனை வயிற்றிற் பிறந்தவன்;
இராமனுக்குத் தூதனாக இலங்கை சென்றவன்; இறவாதவர் எழுவரில் ஒருவன்;
குரங்குக் கூட்டத்திற் சிறந்த வலியும் அறிவும் பெருமையும் பெற்ற ஒருவன். (673)

இந்திரசித்து:- இராவணணுக்கு மண்டோதரி வயிற்றிற் பிறந்தவன்;
இந்திரனைப் பகைத்து இளமைப் பருவத்திலேயே வென்ற காரணத்தால் இந்திரசித்து
எனப் பெயர் பெற்றவன்; அனுமானைப் பிரமனம்பினாற் கட்டிக்கொண்டு போய்த்
தன் தந்தையிடங் காட்டியவன்; நிகும்பலை என்ற வேள்வி யியற்றியவன்; அது
முடிக்குமுன் இலக்குவனாற் கொல்லப்பட்டவன். (674)

இரதி:- மன்மதன் மனைவி; கண்ணனுடைய மைந்தன் ஆகிய
பிரத்தியும்நனுக்கு மனைவியாகத் தோன்றியவள். (9)

இராகவன்:- இரகு என்ற அரசன் குலத்தில் வந்துதித்த தசரதனுக்குக்
கோசலையின் வயிற்றிற் பிறந்தவன்; இலக்குவன,் பரதன், சத்துருக்கன்
இவர்களுக்குத் தமையன். இவன் மனைவி சீதை என்பவள். (674)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:53:08(இந்திய நேரம்)