தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

றார். இறைவன் புன்முறுவல் பூத்து "நல்குரவே வேண்டும் என்ற கருத்தை
விளக்குக" என்று கருணையுடன் கேட்டான். "திருவுள்ளத்திற்குத் தெரியாதது ஒன்று
உண்டோ? நின்றிருவடி நினைவுக்கு இச்செல்வம் இடையூறு செய்யும் என்றுதான்
வெறுக்கின்றேன்" என்றான். "நினக்குச் செல்வம் அளித்தது நின்னைச்
சார்ந்தவர்கட்கு இன்பம் தருவதற்காகவே, ஆதலால் இச்செல்வத்துடனிருந்து என்றும்
வாழ்க. நின்போன்ற அறிவுடையோர் எவ்வகைப்பட்ட இன்பத்தில் வாழினும்
தெய்வத்தை மறவார். செய்யுங் கடமைகளும் செய்யாது விடார்" என்று வற்புறுத்திச்
செல்வ வாழ்வில் இருத்திச் சென்றார். பின் குசேலமுனிவர் நெடு நாள் இன்ப
வாழ்வு வாழ்ந்து பின்னர்ப் பரமபதம் ஆகிய வைகுந்தம் அடைந்தார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:52:57(இந்திய நேரம்)