Primary tabs
துப் போர் புரியும்போது கண்ணன் அருகிலிருந்து இவனுடலைப் பிளந்து
தலை கால் மாற்றிப் போடவேண்டுமென்று ஒரு துரும்பைப் பிளந்து மாற்றிக்
குறிப்புக் காட்ட அக்குறிப்பறிந்து வீமன் இரண்டாகப் பிளந்து மாற்றிப் போட்டபின்
மடிந்தவன். (689)
சவரி:- ஒரு வேட்டுவர் குலப் பெண்; மதங்கமுனியாச்சிரமத்திலிருந்து
தொண்டு புரிந்தவள்; இராமனைக் கண்டு மகிழ்ந்தவள். சுக்கிரீவன் இருக்கும்
இடத்தை இராமன் இலக்குவனுக்குக் கூறியவள். இராமனால் முத்தியடைந்தவள். (672)
சவனன்:- சியவனன் என்பதும் இம்முனிவன் பெயர். இவன்
தவம்புரிந்த
காலத்திற் புற்று மூடி அதற்குள் இருந்தான்: சையாதி மன்னன் மகள் சுகன்னி வந்து
துரும்பினால் கண்ணைக் குத்தியதால் தவத்தினின்றும் நீங்கி அவள்மேற்
காதல்கொண்டு அவள் தந்தையிடம் கூறி மணந்தவன்; பின் அசுவினி தேவர்களால்
இளமையுருவம் பெற்றவன். (582)
சனகன்:- மிதிலை நகர் மன்னன்; இராமனுக்கு மாமன்; சீதையைப்
பெற்ற
தந்தை. (581)
சாந்தீபன்:- கண்ணனுக்கும் குசேலனுக்கும் வில்வித்தை
முதலிய கலை
கற்பித்த ஆசிரியன்; மறையோன் (22, 668)
சாம்பவன்:- கரடிவேந்தன். சியமந்தகமணியைச் சிங்கத்தினி்டமிருந்து
கவர்ந்தவன்; அக்காரணத்தாற் கண்ணன் வந்து போர் புரியத் தோல்வியடைந்து
அம்மணியையும் தன் மகளையும் கண்ணனுக்குக் கொடுத்தவன்; சாம்பவதி என்பது
அவள் பெயர். (694)
சாம்பன்:- சாம்பவதிக்கும் கண்ணனுக்கும் பிறந்த மைந்தன்.
துரியோதனன்
மகள் இலக்குமணை என்பவளை மணந்த கணவன். (701)
சிசுபாலன்:- சேதிநாட்டு மன்னன்; கண்ணனுக்கு அத்தை மகன்;
உருக்குமணியை இவனுக்கு மணம் பேசியிருந்தான் உருக்குமன். உருக்குமணிக்கு
இவனை மணக்க விருப்பமில்லை. கண்ணன்மேற் காதல்கொண்டு தூதனுப்பிச்
செய்தி தெரிவித்தாள். அவன் வந்தவுடன் நந்தவனத்தில் இருவரும்
மருவியிருந்தனர். சிசு பாலன் தனக்கு மணம் பேசிய உருக்குமணியைக் கவர்ந்தது
குறித்துப் போர் புரிந்து கண்ணனுக்குத் தோற்றோடினன். பின் தருமர் புரிந்த
இராசசூய வேள்வியிற் கண்ணனுக்கு முதன்மை தரக்கூடா தென்று இழிவாகப்
பேசிப் போர்புரிந்து கண்ணனாற் கொல்லப்பட்டான். (702)
சிவனன்:- சவனன் என்பதும் சியவனன் என்பதும் பேர்,
(582)