தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

சுகமுனிவன்:- வேதவியாச முனிவன் மகன்; கிளி வயிற்றிற் பிறந்தவன்;
பிறந்த பொழுதே துறந்த பெருமை வாய்ந்த முனிவன். (15(பா),1,583)

சுகன்னி:- சையாதி என்ற வேந்தன் புதல்வி; சிவனனுக்கு மனைவி. (587)

சுபத்திரை:- கண்ணனுடன் பிறந்த தங்கை; அருச்சுனன் மனைவி.
அபிமன்னனைப் பெற்ற தாய். (696)

சூர்ப்பணகை:- இராவணன் கங்கை; இராமன்மேற் காதல் கொண்டு வந்தவள்;
சீதையைத் தூக்கிக்கொண்டு போக முயன்றது கண்டு இலக்குவன் மூக்கு முதலிய
உறுப்புக்களை யரிந்து விடுக்கப் பட்டவள். இராவணனுக்குச் சீதையின் அழகும்
இடமுங்கூறிக் கவர்ந்துகொண்டு போகச் செய்தவள். (671)

சையாதி:- வைவச்சு தமனு என்ற அரசன் மகன்; சுகன்னி என்பவளுக்குத்
தந்தை. (586)

சோமுகாசுரன்:- வேதங்களைக் கவர்ந்து கடலுக்குட் சென்று மறைந்தவன்.
திருமால் மச்சமாகப் பிறப்பதற்குக் காரணமானவன். அம்மச்சத்தாற்
கொல்லப்பட்டவன் (662)

தசமுகன்:- இராவணன் (674)

தசரதன்:- அயோத்தி அரசன்; இராமன் இலக்குவன் பரதன் சத்துருக்கன்
இவர்கட்குத் தந்தை (668)

தந்தவக்கிரன்:-விருதசர்மன் என்பவனுக்கு மைந்தன்; வாசுதேவன் தங்கை
சுருததேவி இவன் தாய்; இவன்முன் திருமால் வைகுந்தத்தில் வாயில் காவலனாக
இருந்தவன்; சாபத்தால் உலகிற் பிறந்தவன். கண்ணனுக்குப் பகைவனாயிருந்து
அவனாற் கொல்லப் பட்டவன். (702)

திருதராட்டிரன்:- துரியோதனன் முதலியவர்களைப் பெற்ற தந்தை; பிறவிக்
குருடனாக வாழ்ந்தவன்; காந்தாரியை மணந்தவன்; பாண்டவர்கட்குப் பெரிய
தந்தையாவான் (689)

தேவகி:- தேவகன் மகள்; கஞ்சனுக்குத் தங்கை முறையானவள்; வசுதேவன்
மனைவி. கண்ணனைப் பெற்ற தாய் (4.8(பா),675)

நந்தகோபன்:- ஆயர்குலத் தலைவன்; பெருஞ் செல்வன்; கண்ணனுக்கு
வளர்ப்புத் தந்தை; அசோதையின் கணவன் (677)

நரகன்- நரகாசுரன்:- திருமால் பன்றியாகத் தோன்றிய போது
அவருக்கும் பூமிதேவிக்கும் பிறந்த மைந்தன்; தேவர்கட்குப் பல துன்பம்
விளைத்தவன்; தேவர்கள் வேண்டுகோளால் இவனையும் இவன் தமையன்
ஆனமுரனையும் கண்ணன் கொன்றான். (699)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:54:14(இந்திய நேரம்)