Primary tabs
நிருகன்:-
(கோம்பியாய்க் கிடந்தோன்) மறையோன் சாபத்தினால் ஓணான்
ஆனான்; கண்ணனாற் சாபம் நீங்கப்பெற்றவன் (700)
பத்திரை:- கேகய நாட்டரசன் மகள்; கண்ணன் மனைவியரில்
இவள் ஒருத்தி
(698)
பரதன்:- கைகேசியின் புதல்வன்; இராமனுக்குத் தம்பி்்;
பாதுகையைக்
கொண்டுபோய்ச் சிங்காதனத்தில் வைத்துப் பதினான்கு ஆண்டு அரசு
புரிந்தவன் (670)
பரசுராமன்:- திருமாலின் ஆறாவது பிறப்பாகத் தோன்றியவன்;
சமதக்கினி
முனிவனுக்கும் இரேணுகைக்கும் புதல்வனாக வந்தவன்; கார்த்தவீரியார்ச்சுனன் தன்
தந்தையைக் கொன்றது காரணமாக இருபத்தொரு தலைமுறை அம் மன்னன் வழித்
தோன்றியவரை மழுவால் வெட்டிக் கொன்றவன்; இராமனை எதிர்த்து வலியிழந்து
மானக்கேடு அடைந்து சென்றவன் (667)
பரிட்சித்து;- அருச்சுனன் மகன் அபிமன்னனுக்கு விராடன்
மகள் உத்தரை
வயிற்றிற் பிறந்தவன்; பஞ்சபாண்டவர்கள் வைகுந்தம் செல்லும்போது இவனுக்குப்
பட்டங் கட்டினர். இவன் மைந்தன் சனமேசயன் [15.(பா)1]
பவுண்டர வாசுதேவன்:-நான் தான் வாசுதேவன் என்று கூறிச்
செருக்குற்றுத்
திரிந்தவன்; அதனாற் கண்ணனுடன் போர் புரிந்து அவனாற் கொல்லப்பட்டவன் (700)
பிரகலாதன் :- இரணியன் என்ற அசுரனுக்கு மைந்தன் ; "இரணிய
நம" என்று
ஆசிரியர் கற்பிக்க "அரியோம் நம" என்று திருமாலைத் துதித்தவன் ; இரணியன்
பலவகையாலுங் கொல்லத் தொடங்க அவற்றினின்று தப்புமாறு திருமாலை வேண்ட
அவர் வந்து கற்றூணில் நரசிங்கமாக வெளிப்பட்டு இரணியனைக் கொன்று, என்றும்
அழியாப் பதவியளிக்கப்பெற்றவன். (153)
பிரசேனன்:-சத்திராசித்துவின் உடன் பிறந்தவன்; இவனிடத்திற்
சத்திராசித்து
சியமந்தகமணியைத் தந்தான்; அம்மணியை யணிந்துகொண்டு வேட்டைக்குச்
சென்றான்; அங்கே சிங்கத்தாற் கொல்லப்பட்டிறந்தான்; அவன் வசமிருந்த
மணி அச்சிங்கத்தின் பாற் சில நாளிருந்து கரடிவேந்தன் கைக்கு வந்தது.
பிரலம்பன்:-கஞ்சன் என்பவனுக்குத் துணையாயிருந்த ஓர்
அசுரன்;
இடைக்குலச் சிறுவன்போல வேடங்கொண்டு கண்ணனைக் கொல்லுவதற்கு
ஆயர்பாடி சென்றவன்; பலராமனுடன் விளையாடிக்கொண்டிருந்து
அவனைத் தூக்கிக் கொண்டு போனவன். இந்த வஞ்சகச் செயலையறிந்து
இவனைக் கொன்றான். (675)