தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

   பூதனை:- கண்ணனைக் கொல்வதற்காகக் கஞ்சனால் விடுக்கப்பட்ட
ஓர் அரக்கி; இவள் கண்ணன் சிறு குழந்தையாய்ப் பால் குடிக்கும்
பருவத்தில் அவன் அன்னையைப்போல அழகிய வடிவங் கொண்டுவந்து
மனையி்ல் ஒருவருமில்லாதபோது தூக்கியணைத்து நஞ்சுப்பாலைக்
கொடுத்தவள். கண்ணன் பாலைக் குடிப்பதுபோல அவளுயிரையும்
உண்டுவிட்டான் [10(பா)678]

பொன்னன்:-இரணியன் என்ற அசுரன்; இவன் பிரகலாதன் தந்தை;
இரணிய நம என்று தன்னையே கடவுளாகத் துதிக்கும்படி பிரகலாதனை
வற்புறுத்தியவன். அவனைக் கொல்லப் பல சூழ்ச்சிகள் புரிந்தவன்.
பிரகலாதன் வேண்டுகோட்காகத் தூணில் நரசிங்கமாகத் திருமால்
வெளிப்பட அவருடன் போர் புரிந்து கொல்லப்பட்டான்.(153)

மாரீசன் :- இராவணனுக்கு மாமன் ; அவன் ஏவலால் பொன்மான்
வடிவங்கொண்டு சீதையிடஞ் சென்றவன். இராமனையும் இலக்குவனையும்
பிரிக்கச் சூழ்ச்சி செய்தவன். பின் இராமனாற் கொல்லப்பட்டவன். (672)

மாவலி:-பிரகலாதனுக்குப் பெயரனாகப் பிறந்தவன். திருமால் குறள்
வடிவமாகச் சென்று இவன் பால் மூன்றடி மண்வேண்டினர்.
வேண்டியபடியே கொடுத்தனன். எங்கும் நிறைந்த ஒரு பேருருவம்
எடுத்துப் பூமியை ஒரடியாலளந்து வானத்தை ஒரடியாக அளந்து
மற்றோரடிக்கு இடம் காட்டு என்று கேட்க அவன் தன் தலையைக் காட்ட
அதில் திருவடியை வைத்து வைகுந்தஞ் சேரப்பித்தான். (666)

மித்திர விந்தை:- அவந்தி நாட்டரசன் மகள்; கண்ணனாற்
கவரப்பட்டு அவனை மணந்த காதலி (697)

முசுகுந்தன்:- இவன் ஒரு கந்தருவனாக முற்பிறப்பில் இருந்து
இந்திரனுக்கு உதவி செய்தவன். இப்பிறப்பிற் கண்ணனைக் கண்டு
அக்காட்சியால் வைகுந்தம் பெற்றவன். (690)

வசுதேவன்:- கண்ணனைப் பெற்ற தந்தை; தேவகியின் கணவன்;
கஞ்சனுடைய மைத்துனன்.[10(பா)675]

   வாசுதேவன்:- வசுதேவன் மைந்தனான கண்ணன் பெயர்; கண்ணனைக்
காண்க. (158)

வாமனன்:-திருமாலின் ஐந்தாவது பிறப்பிற் குறள்வடிவங் கொண்டவன்.
மாவலிபால் மூவடிமண் வேண்டி அவனைத் திருவடியால் அழுத்தி வைகுந்த
மளித்தவன். [22(பா)666]


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:54:38(இந்திய நேரம்)