தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

முதலிய நூல்கள் பயில்வது எளிதாகும். மாணவர்கள் பயில்வதற்காகவே கழகத்திற்
சிறிய நூல்கட்கும் விளக்கவுரை வரைந்து வெளியிட்டிருக்கின்றோம். ஆத்திசூடி,
மூதுரை முதலிய நூல்களை நீங்கள் கண்டால் உண்மை விளங்கும். குசேலோ
பாக்கியானம் கழக வாயிலாக விளக்கவுரையுடன் இப்போது வெளிவருகின்றது.
அரிச்சந்திர புராணமும் விளக்கவுரையுடன் அடுத்து வெளிவரக் காண்பீர்கள்,

குசேலோபாக்கியானம் என்பது பாகவதக் கதையில் ஒரு பகுதிக் கதையாம்.
குசேல+உபாக்கியானம்=குசேலோ பாக்கியானம். இது வடமொழிச் சந்தி. இதன்
பொருள் குசேலரைக் குறித்த கிளைக்கதை என்பது. இக்கதை ஆரியப்பப்
புலவரியற்றிய பாகவதத்திலும் வரகவி என்பார் இயற்றிய தெலுங்கு மொழிக்
குசேலோபாக்கியானம் என்ற நூலினும் ஆய்ந்து தொகுக்கப்பட்டது. இதற்கு முதனூல்
இவ்விரண்டுமே. இந்நூல் இயற்றிய ஆசிரியர் தேவராசப் பிள்ளை என்பவர். இவர்
தொண்டை நாட்டு வல்லூரிற் கருணீகர் குலத்தில் வீராச்சாமிப் பிள்ளை
என்பவர்க்குப் புதல்வராகத் தோன்றியவர். இவர் தோன்றிய காலம் கி. பி. 1837 ஆம்
ஆண்டு. இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்களை
ஆசிரியராகத் தம்பால் இருத்தித் தமிழ் நூல்கள் கற்றுச் சிறந்த புலமையுற்றுப் புகழ்
பெற்று வாழ்ந்தவர். மாந்தர் யாவரும் அறிவுச் செல்வம் பெற்று வாழவேண்டும்
என்ற பொதுநோக்குடன் இந்நூலை இயற்றினர் எனத் தெரிகின்றது, இந்நூல்
அரங்கேற்றிய காலம் இற்றைக்குச் சற்றேறத் தாழ ஒரு நூறாண்டுக்கு முந்தியது.
"ஏராரும்" என்ற முதற்குறிப்புடைய பாயிரச் செய்யுள் காலத்தைத்
தெற்றெனக்காட்டுகின்றது காண்க.

இந்நூலில் மக்கட்குரிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளும்
விளங்கக் காணலாம். தெய்வத் திருவருள், இல்லற வியல், மனைக்கிழத்திமாண்பு,
வறுமையிற் செம்மை, செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, நண்பின் பண்பு,
செல்வத்திற் செருக்கின்மை, மறையோரியல்பு, மன்னவரியல்பு முதலிய மக்கட்கு
வேண்டும் அறிவு நலம்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:55:10(இந்திய நேரம்)