Primary tabs
                        அருள்வட்ட மாக அறிவு
                    கதிராய்ப்
                        பொருள்வட்ட மெல்லாம்
                    விளக்கி--இருள்வட்டம்
                        மாற்றும் அறிவான ஞான
                    வளரொளியான்
                        வேற்றிலிங் கந்தோன்றும்
                    வென்று.                 
                    1  
                  
                        மாமாங்க மாடல் மணற்குவித்தல்
                    கல்லிடுதல்
                        தாமோங் குயர்வரைமேற்
                    சாவீழ்தல்--காமங்கொண்
                        டாடோ டெருமை யறுத்தல்
                    இவையுலக
                        மூடம் எனவுணரற்
                    பாற்று.                       
                    2
                  
                        சக்கரன் நான்முகன் சங்கரன்
                    பூரணன்
                        புத்தன் கபிலன்
                    கணாதரனென்--றெத்திறத்
                        தேகாந்த வாதிக ளெண்கேட்ட
                    ஆதன்போல்
                        ஆகாதாம் ஆத்தன்
                    றுணிவு.                      
                    3
                  
                        கடம்பன்றான் றன்னொடு
                    காம்படுதோள் வள்ளி
                        உடம்பினுங் கூட்ட மதுவுவந்து
                    கேட்பர்
                        கொடுத்துண்மின் கொண்டொழுக்கங்
                    காணுமினென்பார் 
                                                                     
                    சொல்
                        அடுப்பேற்றி யாமைதீந்
                    தற்று.                    
                    4
                  
                        நன்ஞான நற்காட்சி நல்லொழுக்க
                    மென்றிவை
                        தன்னான் முடித்தறா னில்லையேற்
                    பொன்னேபோல்
                        ஆவட்டஞ் செய்த வணிகலந்
                    தேயகிற்போ
                        லாய்வட்ட நில்லா
                    துடம்பு.                       
                    5
                  
                        நாலிறகிற் கண்ணில தேயெனினு
                    நன்பொருளின்
                        பேரிறையா னுண்பெயரிற்
                    பிற்சிறக்கு மோரும்
                        இருகண் னுளதே யெனினு
                    மதனை
                        வெருண்டு விலங்காமற்
                    கா.                      
                    6
                  
குறிப்பு : இந்த ஆறு செய்யுட்களும் பொருள் விளங்காமையாற் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டன.
 
						