Primary tabs
முன்னுரை
சித்தர் பாடல்கள் பெரிய இலக்கிய சாகரம். இந்த சாகரத்தில் நமக்குக்
கிடைத்திருப்பவை கையளவு தண்ணீரே. இந்தக் கையளவுத் தண்ணீரும்
சிறுகச் சிறுகத் துளித் துளியாய் சேமித்தவையே. இதற்கே இத்துணை சிறப்பு
என்றால் முழுவதையும் சுவைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுமானால் எத்துணை
அகப்பெரு இன்பமாயிருக்கும், ஒரே மலைப்பாக இருக்கிறதல்லவா?
சித்தர் பாடல்கள் அனைத்தும் கரடுமுரடான சொற்களைக் கொண்டவை.
மறைபொருள் நிறைந்தவை. பாடல்கள் தங்கு தடையின்றிப் படிப்பதற்கே
பெரும் சிரமமாயிருக்க இதில் அவர்கள் கூறும் கருத்துக்களை உணர்ந்து
கொள்வது சாதாரணச் செயலா என்ன?
நண்பர் கோமதிநாயகம் சித்தர் பாடல்கள் முழுமையும் உரையுடன்
வெளியிட வேண்டும் என்ற தணியாத விருப்பத்துடன் தகுந்த சான்றோர்களை
அணுகிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக என்னிடமும் இதுபற்றிக்
கூறினார்.
சித்தர் பாடல்களுக்கு உரை காண்பது என்பது அவ்வளவு எளிதான
செயலா என்ன? அதுவும் சரியான பொருளுடன். அப்படி உண்மையிலேயே
உண்மையான பொருளை உணர்த்த வேண்டுமென்றால் அவரும் ஒரு
சித்தராக வல்லவோ இருக்க வேண்டும். நான் என் இயலாமையைக்
கூறினேன். சித்தர் பாடல்கள் எல்லாவற்றையும் உரையுடன் வெளியிடுவது
என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் இயலாத காரியம் என்றும், சில
ஆய்வியல் அறிஞர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் நான்
தெரிவிக்கவே, ஒவ்வொரு சித்தர் பாடல்களுக்கும் ஓர் அறிமுக உரையேனும்
செய்து வெளியிட