தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Sithar Padalkal


வேண்டும். அதுவும் சித்தர் நூல்களில் பயிற்சியுடைய நீங்கள் செய்து தந்தால்
இன்னும்  சிறப்பாயிருக்கும்  என்று இந்தப் பெரும் பொறுப்பினை என்னிடம்
ஒப்படைத்து விட்டார்.

அவரது  அன்புக்குக் கட்டுப்பட்ட நான் கிடைத்த சித்தர் பாடல்களைப்
பல  தொகுப்புகளாகப்  பிரித்து  அறிமுக உரை  செய்யத்  தொடங்கினேன்.
வேலையை  ஆரம்பித்த  பிறகுதான் அதன் சிரமங்கள் முழுமையாகத் தெரிய
ஆரம்பித்தது.

சித்தர்  பாடல்களில்   இலக்கிய  மரபுகளை  மீறிய  நடைமுறைகளும்,
வட்டார  வழக்கு  சொலவங்களும்  நிறையக்  கலந்துள்ளன.  இதுவேயன்றிப்
பாடல்கள்  முழுக்க  மறை பொருள் செய்திகளே காணப்படுகின்றன. இதனால்
தான்  சித்தர்  பாடல்களுக்கு  உரை   செய்ய   யாரும்  முன்வருவதில்லை.
ஆயினும்,  அறிஞர்களின்  பெரும்  முயற்சியால்  திருமந்திரம், சிவவாக்கியர்
பாடல் முதலான ஒருசில பாடல் தொகுப்புகள் உரையுடன் வெளிவந்துள்ளன.
மீதியிருக்கும்  பாடல்களுக்கு  முழுவதும்  உரை  செய்ய இயலாவிடினும் ஓர்
அறிமுக  உரையேனும்  என்னால்  வழங்க முடிந்ததே என்ற ஆத்ம திருப்தி
யுடன் இந்த பதினெண் சித்தர் பாடல்களை உங்கள் முன் படைக்கிறேன்.

இந்நூலைத்  தொடர்ந்து ஏனைய சித்தர் பாடல் தொகுப்புகள் அறிமுக
உரையுடன்  உங்கள்  முன் அறிமுகமாக உள்ளன. இந்தப் பெரிய இலக்கியப்
பணியில் எனக்கு வாய்ப்பளித்த நண்பருக்கு அநேக நன்றிகள் உரித்தாகும்.

இந்தச் சித்தர் பாடல் தொகுப்புகளை இலக்கிய உலகு வரவேற்குமாக.

அன்புடன்
சி. எ.ஸ். முருகேசன்
புதுச்சேரி.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:09:03(இந்திய நேரம்)