தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


7

முகவுரை இப்பதிப்பின் பின்இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பாரி
நிலைய மான்மியப் பதிப்பில்     உள்ள 249 அடிக்குறிப்புகளில் 16
குறிப்புகள் நீக்கப்பட்டு எஞ்சிய         233 அடிக்குறிப்புகள் சில
மாற்றங்களுடன் இப்பதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 205
புதிய அடிக்குறிப்புகள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆசியஜோதியின் பாடல்களுக்கு வையாபுரிப்பிள்ளை  எழுதிய
முன்னுரை, பிற்காலப்பதிப்புகளில்       நீக்கப்பட்டுள்ளது. அதோடு
ஆசியஜோதி பல பல்கலைக்         கழகங்களில் பாடத்திட்டத்தில்
இருந்ததன் காரணமாகக் கதைத்    தொடர்ச்சி தெளிவாக இருக்கவும்,
மாணவர்கள் புரிந்து கொள்ளும் முறையிலும் சிறு உள் தலைப்புகளும்
கொடுக்கப்பட்டுள்ளன.         ஆசியஜோதி பாடல்கள் வெளிவந்த
இதழ்களில் இந்த உள் தலைப்புகள்   இல்லை. எனவே இப்பதிப்பில்
ஆசிய ஜோதி, மூலத்தில் உள்ளபடி பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு
இந்நூலுக்கு ஆரம்பகாலத்தில்         வையாபுரிப்பிள்ளை எழுதிய
முகவுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பதிப்பில் உள்ள       தே.வி.யின் கீர்த்தனங்கள் பகுதியில்
கீர்த்தனங்கள் கால வரிசைப்படி        கொடுக்கப்பட்டுள்ளன. பாரி
நிலையப் பதிப்பில் உள்ளவரிசைகள்       இங்கு மாற்றப்பட்டுள்ளன.
அதோடு தே.வி.யின் கீர்த்தனங்கள், பாரிநிலையப்         பதிப்பின்
ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள நாமகள் துதி என்னும்  தலைப்பில்
உள்ள பாடலும், தமிழிசை என்னும்      தலைப்பில் உள்ள பாடலும்,
இத்தொகுதியின் இறுதியில் உள்ள  விண்ணப்பம் என்னும் தலைப்பில்
உள்ள மூன்று  பாடல்களும்      பாரிநிலையம் மலரும் மாமலையும்
தொகுதியிலும் உள்ளன. இந்தப் பதிப்பில்    இங்குக் குறிப்பிடப்பட்ட
ஐந்து பாடல்களும் தே.வி.யின்        கீர்த்தனங்கள் பகுதியிலிருந்து
நீக்கப்பட்டுள்ளன. மேலும்          இந்த ஆய்வுப் பதிப்பில் புதிய
கீர்த்தனைகள் இரண்டும்    சேர்க்கப்பட்டுள்ளன. இவை இதழ்களில்
வெளியானவை தாம்,        இப்பதிப்பில் தே.வி.யின் கீர்த்தனங்கள்
வெளிவந்த இதழ்கள், காலம்  ஆகியவை அடையாளம் காணப்பட்டு
அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:19:56(இந்திய நேரம்)