தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-டாக்டர்இ.சுந்தரமூர்த்தி (துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்)


8

முனைவர் இ.சுந்தரமூர்த்தி
துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

அணிந்துரை

கவிதைக்கு இலக்கணம்           கூறும்  திறனாய்வாளர்கள்
‘உள்ளத்துள்ளது கவிதை  இன்பம் உருவெடுப்பது கவிதை’  என்னும்
மேற்கோளைப் பயன்படுத்தாது இருக்கமாட்டார்கள். தமிழ் பயில்வோர்
அனைவரின் நாவிலும் பயிலும் இவ்வழகிய  பாடல்வரிகளைப் பாடிய
கவிமணியின் கவிதைகளும் படிப்போர்க்கு இன்பந்தந்து அவர் பாடிய கவிதை இலக்கணத்திற்கே    இலக்கியமாகத் திகழ்கின்றன. ‘தெள்ளத்
தெளிந்த தமிழில் உண்மை      தெரிந்துரைத்த கவிதைகளாக’ அவர்
பாடல்கள் விளங்குகின்றன.

கவிதை, கல்வெட்டு, இசை,    மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு
துறைகளிலும் தம் முத்திரையைப்   பதித்தவர் கவிமணி. கவிதையோடு
கலந்து கவிதையாகவே வாழ்ந்தவர் கவிமணி. ‘உள்ளத்தினின்று தானே
கனிந்து வெளிப்படுவதுதான் கவி.    அத்தகைய கவி என்றுகூறுவதை
விடக் கனி என்று கூறுவது மிகவும்  பொருந்தும். கவிகளைக் கவிஞன்
எப்பொழுதும் தள்ளிக் கொண்டிருப்பான்       என்று எதிர்பார்த்தல்
இயலாது. அவன் பழமரத்தைப்            போன்றவன். மரம் உரிய
காலத்திலேதான் பழங்களைக்     கொடுக்கிறது. கவிஞனும் உணர்ச்சி
தன்னைத் தாக்கிய        காலங்களிலேதான் கவிதை புனைகின்றான்.
பலகாலங்கள் அவன் பாடாமல் இருந்து விடவுங்கூடும்.  ‘இம்மென்னும்
முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரமுமாகப் பாடித்
தள்ளிவிடவுங் கூடும். அதற்குப் பக்குவமாக   அவன் உள்ளம் கனிய
வேண்டும். இன்னும்       சொல்லப்போனால் உண்மையான கவிதை,
பொங்கி வரும் கங்கைப் பெருக்கைப் போன்றது. அது இன்ப ஊற்றாக
அமைந்து,     ஓசையால் - பொருளால் - உணர்ச்சியால் உள்ளத்துள்
இன்பத்தைத் தேக்கி           எவரையும் ஆனந்தப் பெருங்கடலுள்
ஆழ்த்திவிடும்’ என்று கவிமணி       கவிதைபற்றிக் கூறிய கருத்தை
ஆய்வாளர் குறிப்பிடுவர்              (கவிமணி தேசிய விநாயகம்
பிள்ளை-செ.சதாசிவம், ப. 74).

கவிமணியின் கவிதைகளும்        உணர்ச்சி வாயிலாக வெளிப்பட்டு
நம்மையும் ஆனந்தப் பெருங்கடலுள்      ஆழ்த்துவன. உள்ளத்தில்
இல்லாத


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:20:08(இந்திய நேரம்)