தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


9

இறைவனை எங்குத் தேடினாலும் உணர முடியாது என்பதைக் கவிமணி
தம் இனிய சொற்களால் வெளிப்படுத்துவார்.

உள்ளத்தில் உள்ளான் அடி - அதுநீ
     உணரவேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய் எனில் - கோயில்
     உள்ளேயுங் காண்பாய் அடி

என்று இறைவனைக் காண்பதற்கு உள்ளம் இன்றியமையாதது என்பார்.
அதுபோலவே கவிதையையும்   காண்பதற்குக் கவியுள்ளம் வேண்டும்
என்பார். எனவே கவிமணிக்கு       ‘இறையும் கவியும்’ ஒன்றாகவே
தோற்றமளிக்கின்றன எனலாம்.      ‘நட்ட கல்லைத் தெய்வம் என்று
நாலுபுட்பம் சார்த்தியே        சுற்றிவந்து முணுமுணுக்கும் சொல்லும்
மந்திரம் ஏதடா? நட்ட கல்லும்   பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி கறிச்சுவை அறியுமோ?’    என்று முன்னையோர் கூறியது
போல் இறைவனைக் காண     இறையுள்ளம் வேண்டும்; அவ்வாறே
கவிதையைக் காண             கவியுள்ளம் வேண்டும். இத்தகைய
உள்ளத்தோடுதான் கவிமணி கவிதையை  அணுகுகின்றார்.கவிதையை
எவரும் எக்காலத்தும் அழிக்க     முடியாது என்பதனைக் கவிமணி
பின்வருமாறு காட்டுவார்.

ஓலை எரியும் தாளெரியும்
     உள்ளத்து எழுதி வைத்து நிதம்
காலை மாலை ஓது கவி
     கனலில்வெந்து கரிந்திடுமோ?
சிந்தை மகிழ விழாக்கண்ட
     தேர்ந்த புலவர் முன்வந்து
சந்த மெழவே பாடுகவி
     தழலில் வெந்து நீறாமோ?
உள்ளத்து உவகை பொங்கியெழ
     உரைகள் சொல்லப் பொருளேறித்
தெள்ளத் தெளிந்த கவியமுதம்
     தீயில் வெந்து பொடியாமோ?

என்று கவிதைக்கு அழிவில்லை என்பார் கவிமணி.

‘என் எழுத்தும் தெய்வம்; என்எழுதுகோலும் தெய்வம்’ என்று கூறிய மகாகவி பாரதியின் கவிதைகளில் தம்  உள்ளத்தைப் பறிகொடுத்தவர் கவிமணி. ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’   என்று அடைமொழி தந்து


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:20:19(இந்திய நேரம்)