தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


15

குறிப்புகளையும் இத்தொகுப்பில் தந்துள்ள பதிப்பாசிரியர்களின் பெரும்
முயற்சி பெரிதும் பாராட்டத்தககது.

கவிமணியின் நூற்றாண்டு விழா     பதிப்பாசிரியர்களுக்கு ஒரு
உந்து சக்தியாக விளங்கியது. கவிமணிபற்றிய அரிய செய்திகள், அவர்
தம் வாழ்வு நிகழ்வுகள், அரிய புகைப்படங்கள் ஆகிய அனைத்தையும்
தொகுத்தளித்துள்ளனர்.

கவிதைகளின்    படைப்புப் பின்னணியையும் பதிப்பாசிரியர்கள்
விளக்கியிருப்பது கவிதைகளைப்  புரிந்துகொள்ள மேலும் துணையாய்
அமைகின்றது. கவிமணி  கவிதை நூலின் முதல் பதிப்பலிருந்து இன்று
வரை வெளிவந்துள்ள அனைத்து    நூல்களின் பட்டியலும் கவிமணி
குறித்து மேலும்      ஆராய்வார்க்குப் பேருதவி புரியும். இத்தொகுதி
‘கவிமணியின் களஞ்சியம்’ எனப் போற்றப்படுமளவிற்குப்பெருமைப்பாடு
உடையது.

பதிப்பாசிரியர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் இனிய பாராட்டுதல்கள்.
தமிழ் நல்லுலகம் இந்நூலினை ஏற்றுப் போற்றுமாக.

 

தஞ்சாவூர்
25.12.2002      

 (இ.சுந்தரமூர்த்தி)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:22:31(இந்திய நேரம்)