தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-டாக்டர் தே. வேலப்பன்(முன். முதல்வர், தெ.தி.இந்துக் கல்லூரி,நாகர்கோவில்)


16

டாக்டர் தே.வேலப்பன் M.A., M.Lit.,Ph.D.,
முன்னாள் முதல்வர்
தெ.தி. இந்துக்கல்லூரி, நாகர்கோவில்.


அணிந்துரை

“செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்
கிந்தநூ லுரியதாய் என்றும் வாழ்கவே”

என்று தமது கைப்பட எழுதித்   தமது கவிதைகளின் முதல் தொகுப்பு
நூலுரிமையைப் பதிவு      செய்து வைத்தார் கவிமணி. அந்தப் பதிவு
மெய்ப்பிக்கப்      பெற்றுக்கவிமணியின் நூல்கள் அரசுடைமையாக்கப்
பெற்ற நிலையில்,  வெளிவரும் ஒரு முழுமையான தொகுப்பு நூல் இது.

நூலாசிரியர்கள் இருவரும்          தமிழ்ப்  பேராசிரியர்களாக 
மட்டுமல்லாது தமிழ் நூலாசிரியர்களாகவும் உள்ளவர்கள். இருவருக்கும்
பொதுவான துறை நாட்டார்   வழக்காறு மற்றும் இலக்கியம். இருவரும்
தத்தம் சிறப்புத் துறைகளில் தனித்தனியாக  எழுதியுள்ள நூல்களுக்குப்
புறமே, இருவரும்      இணைந்தெழுதியுள்ள சமீபகால இருநூல்களும்
கவிமணி பற்றியவையே, தாம் நேரில் பார்த்திராத ஒரு “பழங்” கவிஞர்
மீது, இவ்விருவரும் இவ்வளவு ஈடுபாடு காட்டக் காரணம் தான் என்ன?

ஒரு வில்லுப்பாட்டு நூலொன்றை   ஆங்கிலத்தில் ஆய்ந்தெழுதி, அது வெளியிடப்படக் கவிமணி காரணகர்த்தராக இருந்திருக்கிறார்.தமது
சீடர்களை, நாட்டார் பாடல்களைச் சேகரிக்க ஏவியிருக்கிறார்; நாட்டார்
பாடல்களின் தாக்கத்துக்கு அங்கங்கே    ஆளாகியுமிருக்கிறார். இவை
மட்டுமன்று. வழக்கமாக நாட்டார்   இலக்கியங்களில் காணமுடிகிற ஒரு
“யதார்த்த” தன்மையைக் கள்ளங்கபடின்மையை, சத்திய வேட்கையை -
“குழந்தைமை”யைக் கவிமணி பாடல்களில்   நூலாசிரியர்கள் முழுக்க
முழுக்கக் கண்டிருக்கிறார்கள். அவை அவர்களை நன்கு ஈர்த்துள்ளன.

அவரது ‘மான்மியம்’ நூல்     ஒரு    சமுதாயத்தின் யதார்த்த
நிலையைப் பிட்டுப்பிட்டுவைத்த ஒன்று. ‘உமர்கய்யாம்’ நூலும்வாழ்வின்
யதார்த்தத்தைக் கூறுகிறதே யொழிய, சூஃபிஸ-எபிக்கூரிய  சிந்தனைச்-
சர்ச்சைகளில் சிக்கிக்        கொள்ள இடங்கொடாத சிறப்புக்குரியது.
இத்தகைய    கள்ளங் கபடமற்ற யதார்த்த நிலையை மிகக் குறிப்பாக
எடுத்துக்காட்டுவது,              1954-இல் “தினமணி”க்கு அளித்த
பேட்டியொன்றில்,            “பாகிஸ்தான்-மத அடிப்படையில் அது
கேட்கப்பட்டது; நிறுவவும் பட்டது. கெட்டுப் போக


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:22:42(இந்திய நேரம்)