Primary tabs
அடங்கிய ‘மலரும் உள்ளம்’ (முதற்றொகுதி) 1954இல்
வெளிவந்தது.
பின்னர், 1961இல் ‘மலரும் உள்ளம், (இரண்டாம் தொகுதி) வெளிவந்தது.
இன்று நூற்றுக்கணக்கானோர் அவர் நடையைத் தம் நடையாகவும், அவர்
கருத்தைத் தம் கருத்தாகவும், அவர் உத்தியைத் தம் உத்தியாகவும் கொண்டு
கவிதைகள் எழுதி வருகின்றனர். ஊரென்றாலே ‘உறையூர்’, பூவென்றாலே
‘தாமரை’ என்பதுபோல ‘குழந்தைக் கவிஞர்’ என்றாலே அது அழ.
வள்ளியப்பாவைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. கவிமணி குழந்தை
இலக்கியத்திற்கு வித்திட்டார்; முளைத்து வளர்ந்துள்ள குழந்தைக்
கவிதையெனும் ஆலின் அடிமரமாகவும்-ஆணிவேராகவும் இருப்பவர் அழ.
வள்ளியப்பாவே ஆவர். இன்று நூற்றுக்கணக்கில் அந்த ஆலின் விழுதுகள்
நிலத்திலூன்றிக் கவின் செய்கின்றன.
“குழந்தைகட்கு எழுதுபவர்கள் தம் அறிவாற்றல் புலமைகளையெல்லாம்
ஒருபுறம் ஒதுக்கி விட்டு, தாமும் குழந்தையாகி, குழந்தைகளின் மன
இயல்புகளை ஓர்ந்து அவர்கள் சுவைக்கும் விதத்தில் கவிதைகளைப்
படைக்கவேண்டும்” என்பதை முற்றிலும் கடைப்பிடித்து எழுதியவர்-எழுதி
வருபவர் திரு அழ. வள்ளியப்பா ஆவர்.
கற்பிக்கும் ஆசிரியர்
எதையும் நேரடியாகக் கற்பிப்பதைவிடக் கதை வாயிலாகவோ,
பாடல்
வாயிலாகவோ கற்பிக்கும்போது குழந்தைகள் அவற்றை எளிதில் கற்றுக்
கொள்ளுகின்றன. கவிஞர் அழ. வள்ளியப்பா,