Primary tabs
அ, ஆ என்றேனே
அத்தை வீடு சென்றேனே
இ, ஈ என்றேனே
இட்டலி எட்டுத் தின்றேனே...
என அகர வரிசையையும்,
எங்கள் வீட்டில் குழந்தைகள்
என்னைச் சேர்த்து நான்கு பேர்
தங்கைப் பாப்பா ஒன்று
சமர்த்துப் பையன் இரண்டு
சின்னக் கண்ணன் மூன்று
சிரிக்கும் முருகன் நான்கு
என எண்களையும்,
ஏழும் ஏழும் பதினாலாம்எலியாருக்கு முழம் வாலாம்
எனக் கணக்கையும்,
கண்டங் களிலே மிகவும் பெரியகண்டம் ஆசியா...
என நில நூலையும்,
தாஜ் மகாலைக் கட்டியவர்யார்? யார்? யார்?
சக்ரவர்த்தி ஷாஜகானாம்
கேள், கேள், கேள்
என வேடிக்கைப் போக்கில் வரலாற்றுச் செய்திகளையும்,
வண்ண வண்ணப் பூக்கள்-நல்லமணம் நிறைந்த பூக்கள்...
நீலம் பச்சை சிவப்பு-இன்னும்
நிறங்கள் பலவும் உண்டு