Primary tabs
செடி நட்டு வளர்க்க வேண்டும். விண்கலத்தில் ஏறி
நிலாவுக்குச்
செல்லும் விஞ்ஞான அறிவு வளர வேண்டும். எண்ணம், வாக்கு,
செய்கையிலே இனிமை இருந்தால் வாழ்வே இன்பமாம். ஆண்டவன் தந்த
கையால் அனுதினமும் வேலை செய்து அனைவர்க்கும் உதவி
செய்யவேண்டும். கட்டியணைத்து வளர்த்த அன்னையின் கை கடவுள்
போன்றது. ஆசிரியரை மதிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தனைகளைப்
பக்கந்தோறும் பெய்து செல்கிறார்.
பிறந்த நாள் என்றால் குழந்தைகட்குத் தின்பண்டங்களும்,
புத்தாடை
களும், பரிசுப் பொருள்களுந்தான் நினைவுக்கு வரும். நம் கவிஞரோ
அந்நாளை,
அறிவை வளர்த்துக் கொள்ளவும்
என்றும் நன்மை செய்யவும்
எண்ணிப் பார்க்கும் நல்லநாள்
என்கிறார். பள்ளிக்கூட மணி, பலரும் போற்ற நல்லபெயர் எடுக்கச்
சொல்லியும், படித்தபடி வாழ்க்கையிலே நடக்கச் சொல்லியும் ‘டாண் டாண்’
என ஒலிக்கிறதாம்!
உயரிய உவமையாளர்
உவமை வாயிலாகச் சொல்லப்படும் செய்திகள் உள்ளத்தே நன்கு
பதியும். ‘பாய்ந்தான்’ என்பதையே ‘புலி போலப் பாய்ந்தான்’ என்னும்போது
பொருள் அழுத்தம் பெறுகிறது. உவமையைப் பொருத்தமுறக் கூறுவதில்
அழ. வள்ளியப்பா தனித்த திறம் காட்டுகிறார்.