தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


சிரிக்கும் பூக்கள்
xiii

கொக்கின் மூக்கிற்கு ஈட்டியையும், அன்னத்தின் நிறத்திற்குப்
பாலையும் உவமையாக்குகிறார். எட்டு மாடிக் கட்டடத்தின் மேலே நின்று
கீழே சாலையைப் பார்க்கும்போது அது ‘தலையில் வகிடு எடுத்ததைப்போல்’
இருப்பதாகக் கூறுவது அருமையான உவமை.

                  தட்டில் இருந்த சோளப் பொரியை
                     
விட்டு எறிந்த தார்? - பின்
                  நட்ட நடுவே அந்த வெள்ளித்
                      தட்டை வைத்தது யார்?

என உடுக்களைச் சிதறிக்கிடக்கும் சோளப் பொரியாகவும் நிலவை
அவற்றினிடையே கிடக்கும் வெள்ளித் தட்டாகவும் சுட்டிக் குழந்தைகட்கு
உருவகத்தையும் அறிமுகப்படுத்தி விடுகிறார். குழந்தைகள் அறிந்தும்
உணர்ந்துமுள்ளவற்றையே கவிஞர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.

நயமிகு நகைச் சுவையாளர்

அனைவர்க்குமே நகைச்சுவை இனிமை பயப்பது. குழந்தைகட்கோ
அது கொள்ளை இன்பம் தருவது. அழ. வள்ளியப்பா அவர்கள் வேடிக்கைப்
பாடல்கள் என்றும், நகைச்சுவைப் பாக்கள் என்றும் பல கவிதைகள்
புனைந்துள்ளார்.

                 சுப்பு வுடைய பாட்டி வயது
                 
  தொண்ணூற் றொன்பது-அவள்
                 சுறுசுறுப்பைப் பார்க்கும் போது
                    இருபத் தொன்பது!

தொண்ணூற்றொன்பதும், இருபத்தொன்பதும் செய்யும் வேடிக்கை பெரு
வேடிக்கை. தாடிச்  


புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:49:10(இந்திய நேரம்)