தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிரிக்கும் பூக்கள்

சிரிக்கும் பூக்கள்

காரைக்குடிக்குச் சென்ற இரண்டு ஆண்டுகள் வரை எனக்கு ஓய்வு
இல்லை. வங்கிப் பணியில் மிகுதியாக ஈடுபட நேர்ந்தது. அதன் பின்னர் -

என் அருமை நண்பர் ரத்னம் அவர்களுக்கு உடல் நலம் குன்றியது.
அவர் விரைவில் குணமடைவார், அவரது உதவியுடன் புத்தகத்தைச் சிறந்த
முறையில் கொண்டுவந்து விடலாமென நினைத்தேன். அவர் விரைவில்
குணம் பெற வேண்டுமென, அவருடைய எண்ணற்ற இனிய நண்பர்களுடன்
சேர்ந்து நானும் ஆண்டவனிடம் வேண்டினேன். ஆயினும், எங்கள்
வேண்டுதலுக்கு ஆண்டவன் செவிசாய்க்கவில்லை. உடல் நலம் குன்றிய
ஈராண்டுகளில் அவரை இழக்க நேரிட்டது.

ரத்னம் அவர்களின் மறைவு என்னைப் பெரிதும் பாதித்தது. புத்தகம்
வெளியிடும் முயற்சியில் இருந்த ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்தது.
‘சிரிக்கும் பூக்கள்’ எப்போது வெளிவரும் என்று கேட்ட நண்பர்களுக்கு
‘விரைவில் வெளிவரும்’ எனக் கூறிக் கொண்டிருந்தேனே தவிர, எவ்வித
முயற்சியிலும் ஈடுபடத் தோன்றவில்லை.

சென்ற ஆண்டு திடீரென ஒருநாள் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
‘ரத்னம் பெயர் சூட்டிய ஒரு புத்தகம் வெளிவராமல் இருப்பதா? நிச்சயம்
வெளி வரவேண்டும். அவருக்கு இப்புத்தகத்தைக் காணிக்கையாக்க
வேண்டும்’ என்பதே அந்த முடிவு.

முன்பு அச்சுக்குக் கொடுக்க நண்பர் ரத்னமும் நானும் தேர்ந்தெடுத்த
பாடல்களுடன் மேலும்


புதுப்பிக்கபட்ட நாள் : 26-02-2019 18:48:59(இந்திய நேரம்)