Primary tabs
வற்றை மேடைகளிலும் எடுத்துக்கூறி அவர்களுக்கு
ஏற்றம்
தருபவர்.
பல விழாக்களில் என்னைப் பாராட்டிப் பேசியதோடு,
பலவகையிலும் எனக்கு ஊக்கமூட்டிவரும் இவரது அணிந்துரை இந்நூலுக்குச்
சிறப்பளிக்கிறது. அணிந்துரை என்று சொல்வதைவிட இதை ஓர் ஆராய்ச்சி
உரை என்றே கூறவேண்டும். மேனாட்டில் குழந்தை இலக்கியம் வளர்ந்த
வரலாற்றையும், தமிழில் குழந்தை இலக்கியம் வளர்ந்து வரும் நிலையையும்
மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
அணிந்துரை வழங்கியுள்ள இரு பேரறிஞர்களுக்கும்
நான் பெரிதும்
கடமைப்பட்டுள்ளேன்.
இத்தொகுப்பிலுள்ள பாடல்கள் அனைத்தையும்
படித்துப் பார்த்து,
அவை திருத்தமுற அமைவதற்கு அரிய பல யோசனைகளைக்
கூறியவர்களில், நல்லாசிரியர் விருது பெற்றவரும், சிறந்த கவிஞரும்,
புலவரும், வானொலி சிறுவர் சங்கப் பேரவையின் தலைவருமாகிய திரு.
தணிகை உலகநாதன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 1954க்குப் பிறகு நான்
எழுதிய கவிதை நூல்கள் அனைத்தும் அவர் பார்வையிட்ட பின்னரே
வெளிவந்துள்ளன.
சிறந்த கவிஞரும் வானொலியில் பல்லாண்டுகள் திறம்படப்
பணியாற்றியவரும், தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
ஆராய்ச்சிப் பேராசிரியராக விளங்குபவருமாகிய திரு. மீ. ப. சோமு
அவர்கள்,
என் முயற்சிகளுக்கெல்லாம் பேருதவி புரிந்து
வருபவரும்,
குழந்தைகளுக்குப் புதிய புதிய