தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிரிக்கும் பூக்கள்

சிரிக்கும் பூக்கள்

பிற மொழிகளில் என் பாடல்கள் வெளிவந்திருப்பதையும்,
பிறமொழி எழுத்தாளர்கள் பலர் எனக்கு அறிமுகமாயிருப்பதையும் கூறி,
“தங்களைப் போன்று இந்தியா முழுவதும் அறிந்த ஓர் அறிஞர்
ஆங்கிலத்தில் அணிந்துரை வழங்கினால், அவர்கள் என்னைப் பற்றியும் என்
படைப்புகளைப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளக் கூடும் என
நினைக்கிறேன்” என்றேன்.

பல்லாண்டுகளாக என் பாடல்களைப் படித்து என்னைப் பாராட்டி
ஊக்கமளித்து வருபவர் அவர். அவரைப் போலவே, அவருடைய அருமை
மகள் திருமதி பிரேமா நந்தகுமாரும் (யுனெஸ்கோவிற்காக பாரதியார்
கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியி்ட்டவர்) என்
பாடல்களைப் பாராட்டி வருபவர்.

என்னைப் பற்றியும் என் பாடல்களைப் பற்றியும் முன்பே
அறிந்திருந்ததால், என் வேண்டுகோளை ஏற்று, சிந்தனையைத் தூண்டும்
வகையில் சிறந்த ஓர் அணிந்துரையை அவர் வழங்கியுள்ளார்.

இன்றுள்ள தமிழறிஞர்களில் மிகவும் பரந்த மனம் கொண்ட
பண்பாளர் திரு. சிலம்பொலி செல்லப்பன் அவர்கள். இவருடைய
நினைவாற்றல் வியப்புக்குரியது. ‘நடமாடும் கவிதைக் களஞ்சிய’ மாகவே
இவர் விளங்குகிறார்.

தொல்காப்பிய சூத்திரத்திலிருந்து, புதிதாக எழுதத் தொடங்கி
யுள்ளவர்களில், பெரும்பாலானவர்களின் கவிதைகள்வரை இவர் நன்கறிவார்.
அறிந்திருப்பதோடு அவற்றில் நல்லன


    
புதுப்பிக்கபட்ட நாள் : 26-02-2019 18:50:20(இந்திய நேரம்)