தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்னுரை

உலகில் பல்வேறு இயக்கங்கள் தோன்றித் தத்தம் கொள்கைகளை
நிறைவேற்றியுள்ளன. அவற்றுள் இந்திய வரலாற்றில் திலகர் சகாப்தம் 
என்பது ஒன்று; காந்தி சகாப்தம் என்பது மற்றொன்று. அந்நாளில் இவ்விரு
சகாப்தங்கள் உருவாயின. காந்தி சகாப்தமானது விடுதலை இயக்கத்தோடு 
சேர்ந்து கிளை இயக்கங்கள் பல தோன்றின. அவை கதர் வளர்ச்சி இயக்கம்,
தீண்டாமை ஒழிப்பு இயக்கம், அகிம்சை பிரசார இயக்கம் என்பனவாகும். 
இவை அத்தனைக்கும் பாடல்களைப் புனைந்து அளித்த பெருமை கவிஞர்
இராமலிங்கம் பிள்ளை அவர்களையே சாரும்.

பிள்ளை அவர்கள் மக்கள் கதர் அணிய வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்திப் பல பாடல்களைப் பாடியுள்ளார். கதர்சேலையைப் பெண்கள்
அணியாததற்குக் காரணம் அது மிகவும் தடிப்பாகச் சால்வையைப்போல் 
இருந்தது. அவற்றை விற்பதற்காகக் கவிஞர் ஒரு பாடலும் எழுதிக் கொடுத்தார்.

 
 
 
கதர்த்துணி வாங்கலையோ ஐயா அம்மா
கதர்த்துணி வாங்கலையோ?
ஏழைகள் நூற்றது எளியவர் நெய்தது
கூழும் இல்லாதவர் குறைபல தீர்ப்பது
கதர்த்துணி வாங்கலையோ?

என்பது அப்பாடலாகும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:57:30(இந்திய நேரம்)