Primary tabs
இயக்கத்தோடு இணைத்தபோது அதற்கெனவும் பாடல்கள் புனைந்து
அளித்தார் நாமக்கல் கவிஞர்.
வேறுள சாத்திரம் யாருக்கினி?
சாதித்து யாரையும் சண்டாளன் என்றிடும்
சாத்திரம் சத்தியச் சம்மதமோ?
எனத் தீண்டாமை ஒழிப்பைப் பற்றிப் பாடியுள்ளார்.
அகிம்சையைப் பற்றிப் பாடும்போது
 காந்தியடிகள் என்னும்
 தலைப்பின்கீழ் காந்தி வழி என்னும் பகுதியில்
 கூறியிருப்பதாவது,
கூறும் அகிம்சை என்றல்ல
எல்லாச் சொல்லும் நன்னோக்கம்
இணைந்த(து) அகிம்சை தன்னோக்கம்
 எனப் பாடிப் போந்துள்ளார்.
"அவளும் அவனும், தமிழன் இதயம், சங்கொலி, காந்தி 
 அஞ்சலி" போன்ற பாடல்கள் படித்து இன்புறத்
 தக்கன.
மகாகவி
 பாரதியார்மீது "படித்தறியா மிக ஏழைக்கிழவனேனும்"
 என்று தொடங்கும் பாடலானது பாரதியின் தரத்தையும்
 திறத்தையும்
 அளந்து காட்ட வல்லதாகும்.
"மடமையதோ
 பிறநாட்டார் மயக்கந்தானோ?" என்ற
 தொடக்கத்தைக் கொண்ட வ.உ.சி. பற்றிய பாடல்
 தொகுப்பானது
 அவரது புகழைப் பரப்புவதாகும்.
"காந்தி வழி பழசா?" என்று தாமே வினா
 எழுப்பி அதற்கு
 விடையளிக்கும் வகையிலே பல பாடல்கள் புனைந்தளித்தார்.
 
 
						