தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


காதலின் முடிவு

காதல், திருமணத்தில் முடியாவிட்டால் சிறப்பில்லை. ஆதலால், தமிழ்ச்
சான்றோர் திருமணத்தை வலியுறுத்தினர். தோழி களவொழுக்கத்தில் பேரிடம்
பெற்றிருப்பதற்கும் 882 களவுப் பாக்களில் பாதிக்குமேல் வரைவுத் துறைகளாய்
இருப்பதற்கும் திருமணக் கொள்கையே ஏதுவாகும்(65). அறத்தொடு நிற்றல்
என்பதில் ’அறம்’ என்பது கற்பைக் குறிக்கும். கற்பென்னும் கடைப்பிடியில்
நின்று களவொழுக்கத்தையும் பெற்றோர்க்கு வெளிப்படுத்தல் என்பது
இத்துறையின் பொருள். தலைவி முன்னரே கற்பு நெறிப்பட்டு விட்டாள்
என்பதனை முதன்மையாக வலியுறுத்துவதே தோழியின் நோக்கம். இற்
செறிப்பு, ஊர் அலர், வெறியாட்டு, நொதுமலர் வரைவு என்ற இன்னாச்
சூழ்நிலைகளைக் கடத்தற்கு இரண்டு வழிகள் உள. ஒன்று, அறத்தொடு
நிற்றல்; ஏனையது உடன்போக்கு. இவற்றுள் ஒன்று நிகழின் மற்றொன்று
நிகழாது. இவ்விரண்டில் ஒன்றே களவு நாடகத்தின் இறுதிக் காட்சியாகும்
என்று களவு நிகழ்ச்சிகளைக் கூறி முடித்துக்காட்டுவர் (83). இங்ஙனம் பல
அரிய செய்திகளை இந்நூல் அறிவிக்கும்.

கரணம்

’கரணத்தில் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த
புணர்ச்சி’ (1091) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர்
ஒழுக்க நெறிக்குப் புறம்பாக வரைந்த உரையை வன்மையாக
மறுத்துள்ளார்(92). இதற்குப் பலர் அறிய மணச்சடங்கு முடிந்த பின்னர்,
அன்பு நெஞ்சங்களைப் பிணித்திருந்த தளைகள் தாமே அவிழ்ந்தன.
காதலர்கள் கட்டற்ற கலவியின்பம் கற்பில் துய்க்கின்றனர் என்பது பொருள்
என்பர். இதுபோலவே, இந்நுலில் சில தொல்காப்பிய நூற்பாக்களுக்கு
நல்லுரை காட்டியுள்ளார். பொருள் வயிற் பிரிவு சங்கப் புலவர்களின்
நெஞ்சையள்ளிய துறைகளுள் ஒன்று எனவும் அதற்குக் காரணம் இன்பமும்
கடமையும் போராடும் இடமாக, நல்ல உணர்ச்சிகள் மோதிக் கொள்ளும்
இடமாக அமைதலே எனவும் குறிப்பர்.

மணந்த குமரியரை மணவாக் குமரியரினின்றும் வேறுபடுத்திக் காட்டும்
நோக்கமே, கரணத்திற்குக் காரணம் என்பர். காற்சிலம்பைக் கழற்றுவது ஒரு
கரணம்; கூந்தலில் மலரணிவது ஒரு கரணம். இவ்விரண்டும் பண்டைத்
திருமணக் காலத்துப் பரவலாக வழக்கிலிருந்த கரணங்கள் என்பதைச் சங்கப்
பாக்களின் துணையால் சான்றுடன் நிறுவுவர்.

அரிய செய்தி

அகத்திணை நிகழ்ச்சிகள் கோவையாக நிரல்படத் தொகுக்கப் பெறும்
தன்மையன அல்ல. எனினும், அப்போக்குக்கு மாறாக ஐங்குறுநூற்றில்
தொண்டிப் பத்து அமைந்துள்ளது. அதனைப் பாடிய அம்மூவனார் களவின்
ஒழுகலாறுகளைத் தொடர்ச்சியாகப்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:35:30(இந்திய நேரம்)