Primary tabs
கிடைக்குமுண்ணு எண்ணாதீங்க
காதலன் ஆடம்பரக்காரன்.அவனை மணந்து அவள் சுகம் பெறப் போவதில்லையென்று வேண்டியவர்கள் சொல்லுகிறார்களாம். காதலி அவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
காலரையும் தூக்கிவிட்டு
நிக்காங்க எங்க மச்சான்
இன்பமாய் தலைப்பாக்கட்டி
பொட்டிடுமோ உங்க நேர்த்தி
பொருந்திடுமோ என் சதுரம்
விட்டுவிடு என்று சொல்லி
வேணவர்கள் சொல்லுதாங்க
வேணவர்கள் சொன்னால் என்ன
கம்படி விழுந்தாலும்
கனியை விடப் போறதில்லை
குளத்துத் தண்ணீ்ர் நிலம்பாய
கங்கையிலே விழுந்த பூவை
கிடைக்குமின்னு எண்ணாதீங்க
வட்டார வழக்கு: வேணவர்கள்-வேண்டியவர்கள்.
குறிப்பு: 'கங்கையில் விழுந்த பூ'- 'எனக்கு மணம் பேசி முடிக்கு முன் என்னை மணம் செய்து கொள்' என்ற பொருள் தோன்றப் பேசுகிறாள்.
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம்.