Primary tabs
சாக்குப் போக்கு !
ஒருவரையொருவர் சந்திக்க வீட்டில் பெற்றோர்களிடம் பல சாக்குப் போக்குகள் சொல்லிவிட்டு வரவேண்டுமெனக் காதலி அவனுக்கு பாடம் சொல்லுகிறாள். அவன் அவளுக்கு இளைத்தவனல்ல என்று அவன் பேச்சால் தெரிகிறது.
சாக்குத்தைக்கப் போறவரே
சாக்குத்தைக்க நீங்க வாங்க
சாலைப் பாதை நான் வாரேன்
சூச்சியமா வார புள்ளா
தூக்குச்சட்டி சோறு கொண்டு
சூட்சியமா நான் வருவேன்
மடை திறக்கப் போறவரே
மடையைத் திறந்திடுங்க
மயில் வந்து நீராட
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
இடம்
:
தூத்துக்குடி மாவட்டம்.