தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathinen Keezhkanakum Thamizhar Vaazhvum


  • பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
     

    மிகுதியாகத் தோன்றின. பக்தி மார்க்கத்தைப் பரப்பியதன் மூலமே சமண
    பௌத்த மதங்களைத் தமிழகத்தில் முறியடித்தனர்.

    நாயன்மார்களின் பாடல்களும், ஆழ்வார்களின் பாசுரங்களும் சமண-
    பௌத்த மத எதிர்ப்புக் காலத்தில் எழுந்தவைகள். அவைகள் பக்தி
    நெறியையே சிறப்பாக வற்புறுத்துகின்றன. இவைகளுக்குப் பின் பிறந்த
    இராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற காவியங்களும் பக்தி
    மார்க்கத்தைப் பரப்பும் காவியங்களாகவே காணப்படுகின்றன.

    ஆகவே, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பிறந்து சில நூற்றாண்டுகள்
    வரையிலும் தமிழகத்தில் புதிய நீதி நூல்கள் தனியாக எழுதப்படவில்லை;
    தொகுக்கப்படவில்லை. பக்தி நூல்கள் மட்டுமே பெருகி வளர்ந்து வந்தன.

    பக்தி மார்க்கம் பரவி, சமண-பௌத்த நெறிகளின் வேகம் குறைந்த பின்
    மீண்டும் சில நீதி நூல்கள் தோன்றின. அவைகள் அவ்வையாரால்
    இயற்றப்பட்ட ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி,
    உலகநாதனார் இயற்றிய உலகநீதி  போன்ற நூல்களேயாகும்.

        இந்நூல்களுக்குப் பின்னே தோன்றிய நூல்கள் சில. அவைகள்
    அதிவீரராம பாண்டியனால் இயற்றப்பட்ட வெற்றி வேற்கை, குமர குருபர
    சுவாமிகளால் இயற்றப்பட்ட நீதிநெறி விளக்கம், சிவப்பிரகாச சுவாமிகள்
    இயற்றிய நன்னெறி இவைகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் நீதிநெறி
    விளக்கம் நூறு வெண்பாக்களைக் கொண்டது. இதைத் திருக்குறளின் சாரம்
    என்று சொல்லலாம்.

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பின்னே தோன்றிய நீதி
    நூல்கள் எல்லாம், பெரும்பாலும் பதினெண்

    iv


புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:21:55(இந்திய நேரம்)