தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathinen Keezhkanakum Thamizhar Vaazhvum


  • பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
     

    கீழ்க்கணக்கு நூல்களைப் பின்பற்றி எழுதப்பட்டவைகள்தாம். இவைகள்
    பொதுவான நீதிகளையே கூறுகின்றன. அனைவர்க்கும் பொதுவான
    அறங்களை உரைப்பதே தமிழ்நூல் மரபாகும்.

    இவற்றுள் வெற்றிவேற்கை, உலகநீதி போன்ற சிலவற்றில் வருணாசிரம
    தரும வாசனையும் வீசுகின்றது; காரணம் அந்நூல்கள் பிறந்த காலத்துச்
    சூழ்நிலையாக இருக்கலாம்.

    அதிவீரராமபாண்டியன், குமரகுருபரர், சிவப்பிரகாசர் முதலியவர்களும்
    பக்தி நெறியை வலியுறுத்தும் பாடல்களைத்தான மிகுதியாக
    இயற்றியிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் ஒழுக்கத்தை வலியுறுத்தும்
    நூல்களையும் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பக்தி மார்க்கம் பரவிய பின் அவ்வையார் நீதி நூல்கள், குமரகுருபரர்
    சிவப்பிரகாசர், அதிவீர ராமபாண்டியன் நூல்கள் பிறந்தன. இந்நிலையை
    எண்ணிப்பார்த்தால், சமண-பௌத்தர்களின் அறநெறியும், வைதீகத்தின்
    பக்தியும் கலந்த நெறியே வைதீக சமயமாகப் பரவியது என்று கொள்ளலாம்.

    தமிழ்ப் புலவர்கள் இடைக் காலத்திலே பக்தியும் ஒழுக்கமும் கலந்த
    நூல்களைத்தான் மிகுதியாக எழுதிக் குவித்தார்கள். இவைகள் புராணங்கள்,
    அந்தாதிகள், கலம்பகங்கள், மாலைகள், பிள்ளைத் தமிழ்கள் என்ற பல
    பெயர்களிலே குவிந்து கிடக்கின்றன.

    பிற்காலத்திலே சதகங்கள் என்ற பெயரிலே பல நூல்கள் தோன்றின.
    அவைகள் பலவும் நீதிகளையே வலியுறுத்துகின்றன. ஆனால் இச்சதகங்கள்
    பெரும்பாலும் வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளைப் பின்பற்றி


புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:22:06(இந்திய நேரம்)