தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathinen Keezhkanakum Thamizhar Vaazhvum


  • பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
     

    எழுதப்பட்டவை. அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், தண்டலையார்
    முதலிய சதக நூல்களைப் படித்துப் பார்ப்போர்க்கு இவ்வுண்மை விளங்கும்.

    சதகங்கள் நூறு பாட்டுக்கள் கொண்டவை; ஏதேனும் ஒரு தெய்வப்
    பெயரை இறுதியிலே வைத்துப் பாடப்பட்டவை. இதற்கு மாறாகப் பாடுவதும்
    உண்டு. இன்று தமிழில் உள்ள சதக நூல்கள் பெரும்பாலும் பொது
    அறங்களையும் வருணாசிரம தரும நீதிகளையும் கூறுகின்றவை. பழைய
    தமிழ்நூல் மரபுக்கு மாறுபட்டவை. ஆயினும் சிறந்த பல நீதிகளை
    இச் சதகங்களிலே காணலாம்.

    ஆகவே, தமிழிலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவைகளுக்குப்
    பின்னே தோன்றிய அவ்வையாரின் நூல்கள், அதன்பின் தோன்றிய
    அதிவீரராம பாண்டியன் நூல், அதன்பின் பிறந்த குமரகுருபரர் நூல்,
    சிவப்பிரகாசர் நூல், அண்மையிலே பிறந்த சதகங்கள், இவைகளே
    அறநூல்களாக விளங்குகின்றன.

    பின்னே பிறந்த அறநூல்களுக்கெல்லாம் பதினெண் கீழ்க்கணக்கு
    நூல்களே வழிகாட்டியவை. இந்நூல்களிலே கொல்லாமை, கள்ளுண்ணாமை,
    பொய்யாமை, காமம் இன்மை, கள்ளாமை என்னும் சீலங்கள்
    வலியுறுத்தப்படுகின்றன. சமணர்களும், பௌத்தர்களும் இவற்றை ஐவகைச்
    சீலம் என்பர். இவைகளே பஞ்சசீலம், இன்னும் பல சிறந்த அறநெறிகளும்
    அந்நூல்களிலே காணப்படுகின்றன.

    பதினெண்கீழ்க் கணக்கு நூல்களிலே கூறப்படும் அறங்கள் எல்லாம்
    தமிழர் அறமா? வேறிடத்திலிருந்து தமிழகத்தில் புகுந்த அறமா, என்று
    வழக்கிடவேண்டியதில்லை. அவைகள் நெடுங்காலமாகத் தமிழ் மக்களால்
    போற்றப்பட்டு வருகின்றன; ஆகையால் அவைகள் தமிழர்களால்


புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:22:18(இந்திய நேரம்)