தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thogaigal


முன்னுரை

பேருந்தின் ஊர்ப்பெயர்ப் பலகைகள், கடைப்பெயர்ப் பலகைகள், விளம்பரப்
பெயர்ப் பலகைகள் முதலானவைகளில் பயன்படுத்தப்படும் தமிழில் - திருமண
அழைப்பிதழ்த் தமிழில் - ஒட்டப்படும் சுவரொட்டித் தமிழில் - அரசு அலுவலகங்கள்
பயன்படுத்தும் தமிழில் - அரசு வெளியிடும் பாடநூல் தமிழில் - தொடக்கப்பள்ளி
ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள்
ஆகியோர்தம் தமிழில், சிறந்த திறனாய்வாளர்கள் எனப் புகழப்படுவோரின் தமிழில் -
முனைவர் பட்டம் வழங்கப்பட்ட ஆய்வேடுகளில் - தமிழ் வாழ்க என உணர்வு
பொங்க எழுதுவோரின் தமிழில் - செய்திப் பத்திரிகைகள், இலக்கியப் பத்திரிகைகள்
எழுதி வெளியிடும் தமிழில் - இலக்கியப் படைப்பாளிகளின் தமிழில் என
அங்கிங்கெனாதபடி பிறந்து வளர்ந்து செழித்திருக்கும் தவறுகள் மலிவோ மலிவு.

 • பலர், அரசியல் அறிவும் ஆங்கில அறிவும் பொது அறிவும் பெற்றிருந்தாலும்,
  தமிழ்த்தேர்ச்சியின்மையால், நாளிதழ்களிலும் வார மாத ஏடுகளிலும் நல்ல
  தமிழ் எழுத இயலாதவர்களாய் இருப்பதைக் காண்கிறோம்.

  - அ.கி. பரந்தாமனார்

 • பிழையில்லாமல் நான்குவரி தமிழ் எழுதக்கூடியவர் ஆயிரத்தில் ஒருவராவது
  இருப்பாரா என்ற ஐயம் எழுகிறது

  - பேரா. ஸ்ரீசந்திரன்

 • பிழை திருத்தும்போதே பிழை
   

 • தமிழ் வாழுமாறு நாம் வாழவேண்டும்
   

 • நம் மொழியார்வம் மொழிப்பற்று யாவும் செயல் வடிவம் பெறவேண்டும்

  - தமிழண்ணல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:43:46(இந்திய நேரம்)