Primary tabs
அலை கடல் (அலைந்த, அலைகின்ற, அலையும் கடல்
- வினைத் தொகை)
அலைக்கடல் (அலையை உடைய கடல்)
இவ்வாறெல்லாம் பொருள் வேறுபட, வேற்றுமை உருபுகளைப்
போல
க், ச், த், ப், பயன்படுகின்றன. எல்லா இடங்களிலும்
இப்படியா
செயல்படுகின்றன? இல்லை. ஏரி கரை / ஏரிக்கரை - கிளி
குறிது /
கிளிக்குறிது என்று மிகுந்தும் மிகாமலும் எழுதலாம்
என உரையாசிரியர்கள்
எடுத்துக்காட்டியுள்ளார்கள். இப்படிப்பட்ட
இடங்கள்தாம் ஒழுங்கைக்
(discipline) கெடுக்கின்றன; அத்துடன் இருவேறுபட்ட
கொள்கையாளர்கள்
(different school of thoughts) உருவாக
வழிவகுக்கின்றன. இவை
இலக்கண நெகிழ்ச்சிகளா? ஒற்றெழுத்துக்கள் பொருள்
வேறுபாட்டை
உண்டாக்குகின்றன என்றால், மற்ற தலைவர்/ மற்றத்
தலைவர் என்பதில் ‘த்’
என்ன பொருள் வேறுபாட்டை உண்டாக்குகின்றது? ஓசை
இனிமைக்காக
என்றொரு காரணம் கூறினால், அதே ஓசைச் சிலருக்கு
இன்பம், சிலருக்குத்
துன்பம்! அப்படியென்றால் தேவைப்படும் இடத்தில்
மட்டும்
பயன்படுத்திக்கொண்டு பிற இடங்களை விட்டுவிடலாமா?
இதுபற்றித்
தமிழ்ப்பல்கலைக்கழகம் முடிவெடுத்தால் தமிழுக்குப்
புதிய பாடம் பிறக்கும்!
புணர்ச்சி என்பது பொதுச்சொல், எனினும் இங்கே
சொல்லொடு சொல்
சேர்வதைக் குறிக்கும். இஃது அல்வழி வேற்றுமை என
இருவகைப்படும். பின்வரும் பட்டியலை நோக்குக: