தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

| TVU |


நன்றி


ஒரு மொழியின் இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. உரைநடையின் கருத்துத் தெளிவிற்கு இந்த நெறிமுறைகள் உதவுகின்றன. இந்த நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் நூலே நடைக் கையேடு. தற்காலத் தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும்போது மொழிநிலையில் க்ரியா எதிர்கொண்ட பிரச்சினைகளை அறிந்ததன் பின்னணியிலும் க்ரியா மற்றும் மொழி அறக்கட்டளையின் அகராதிகள் உருவாக்கத்தில் பங்குகொண்டதன் பின்னணியிலும் இந்திய மொழிகளின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு மொழியியலைப் பயன்படுத்தியதன் பின்னணியிலும் இந்திய மொழிகளுக்கு நடைக் கையேடுகளை உருவாக்க வேண்டும் என்று மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த முனைவர் இ. அண்ணாமலை விரும்பினார். தொடக்க முயற்சியாக 1994இல் கன்னடம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் நடைக் கையேடுகள் உருவாக்கும் திட்டத்தை முன் வைத்தார். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் கன்னடப் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய கன்னட நடைக் கையேடு 1995இல் வெளியாயிற்று. தமிழ் நடைக் கையேட்டை உருவாக்கும் பணியை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), மொழி அறக்கட்டளை (சென்னை) ஆகிய மூன்று நிறுவனங்கள் மேற்கொண்டன.

தமிழ் நடைக் கையேட்டை உருவாக்கும் பணியில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் சார்பில் முனைவர்கள் வ. ஞானசுந்தரம், க. இராமசாமி ஆகியோரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் முனைவர்கள் இராம. சுந்தரம், கி. அரங்கன், மு. சுசீலா ஆகியோரும் மொழி அறக்கட்டளையின் சார்பில் திரு எஸ். ராமகிருஷ்ணன், முனைவர் பா.ரா. சுப்பிரமணியன், பேராசிரியர் கே. நாராயணன் ஆகியோரும் ஈடுபட்டனர். கையேட்டில் இடம்பெற்றுள்ள ஆறு கட்டுரைகளையும் பல்வேறு கால கட்டங்களில் மைசூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் ஏழு முறை கூடிப் பல நிலைகளில் திருத்திச் செப்பம்செய்து அவற்றுக்கு இறுதி வடிவம் தந்தனர். கட்டுரைகளைப் பதிப்பித்து வெளியிடும் பணியை பா.ரா. சுப்பிரமணியன், வ. ஞானசுந்தரம் ஆகியோர் மேற்கொண்டனர். பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் கையேடு எளிதாகவும் உதவியாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் செய்திகளில் திருத்தங்களையும் நூல் அமைப்பிற்கான ஆலோசனைகளையும் வழங்கியவர் திரு எஸ். ராமகிருஷ்ணன். பணி முழுமைக்கும் இ. அண்ணாமலை வழிகாட்டியாக இருந்தார்.

இந்தத் திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு அளித்த இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்(பொறுப்பு) முனைவர் என். ராமசாமி, இப்போதைய


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:09:34(இந்திய நேரம்)