Primary tabs
இயக்குநர்(பொறுப்பு) முனைவர் ஓம்கார் என். கவுல் ஆகியோருக்கும்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் இப்போதைய துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன் ஆகியோருக்கும்
மொழி அறக்கட்டளையின் முன்னாள் செயலர் திரு எஸ். ராமகிருஷ்ணன், இப்போதைய
செயலர் திரு சு. தியடோர் பாஸ்கரன் ஆகியோருக்கும் எங்கள் நன்றி.
வல்லுநர் கூட்டங்கள் சிலவற்றின் விவாதங்களில் கலந்துகொண்டு
தங்கள் கருத்துகளைத் தெரிவித்த (அமரர்) திரு பி. சங்கரலிங்கம், முனைவர்
ந. நடராசப்பிள்ளை, முனைவர் கி. நாச்சிமுத்து ஆகியோருக்கும் எங்கள்
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கையேட்டுப் பணியின் தொடக்க
நிலையில் ஊக்கம் தந்த பல்வேறு தமிழ் வல்லுநர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
இந்தத் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கட்டுரைகளில் கூறப்பட்ட
நெறிமுறைகளின்படி கையேட்டு மொழியை ஒப்புநோக்குவதிலும் கணிப்பொறி
அச்சுப் படிகளில் திருத்தங்கள் செய்வதிலும் ஈடுபாட்டோடு உதவிய திரு
பா. மதுகேஸ்வரனுக்கு (முனைவர் பட்ட ஆய்வு மாணவர், சென்னைப் பல்கலைக்கழகம்)
எங்கள் நன்றி.
கையேட்டின் கட்டுரைகளைக் கணினியில் பதிவுசெய்த மொழி அறக்கட்டளை
உதவியாளர்கள் க. பரிமளம், மு. லதா, ரா. குமாரி ஆகியோருக்கும் நன்றி.
சென்னை
ஜனவரி 2001
பா.ரா. சுப்பிரமணியன்
வ. ஞானசுந்தரம்.
சென்னை
செப்டம்பர், 2004
பா.ரா. சுப்பிரமணியன்