Primary tabs
தெள் - தேள், கொல் - கோல் முதலியவற்றில் பொருள் வேறுபாடு மிகுதி. ஆகையால் எ ஒ என்பவை ஏ ஓ என்பவை போலவே தனியே தேவைப்படுகின்றன. ஹகரம் சேர்ந்த முதலான மெய்கள் (aspirated consonants) தமிழில் இல்லை. ஹகரமும் இல்லை. அதற்கு ஈடாக, வல்லின மெய்யை மென்மையாக்க உதவும் ஆய்தம் என்ற எழுத்து உண்டு. ற ஒருவகையான உரப்பு ஒலி; ர என்பதிலிருந்து வேறானது. ன ஒருவகை மூக்கொலி; பல்லினத்திலிருந்து (dental) வேறுபட்டது. ல போலவே ள என்பதும் தேவை. தெலுங்கு கன்னடத்திலும் அது உண்டு. ழ தமிழிலும் மலையாளத்திலும்மட்டும் பயன்படும் எழுத்து. பழைய கன்னட எழுத்திலும் அது இருந்தது. பிறகு மறைந்தது. தேவநாகரியில் உயிரெழுத்து வரிசையில் உள்ள ரு லு தமிழில் இல்லை. குறுகிய உகரம், குறுகிய இகரம் என்பவை தமிழ் ஒலிகளில் உண்டு; ஆனால் அவற்றிற்கு இப்போது வடிவம் தரும் எழுத்துமுறை இல்லை.
க ச ட த ப என்பவை சொற்களின் முதலிலும், வல்லின மெய்யை அடுத்து வரும்போதும், இரட்டிக்கும்போதும் வல்லொலியாக (surds) ஒலிக்கும். மற்ற இடங்களில் மெல்லொலியாக (sonants) ஒலிக்கும். வல்லொலிக்கும் மெல்லொலிக்கும் தனித்தனி எழுத்துக்கள் இல்லை. இடம் நோக்கியே ஒலி வேறுபாடு அமையும். ஆகவே க என்பதே ஆகவும் ஒலிக்கப்படும். த என்பதே ஆகவும் ஒலிக்கப்படும். இவ்வாறே ச ட ப என்பன ஆகவும் ஒலிக்கும்.
ஆகிய எழுத்துக்கள் (sibilants) தமிழில் இல்லை.
எண்களைக் குறிக்கும் எழுத்துவடிவங்களும் பின்னங்களைக் குறிக்கும் எழுத்துவடிவங்களும் தமிழில் தனியே உள்ளன. இன்று 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என வழங்கும் எண் வடிவங்கள், தமிழ் எண் வடிவங்களிலிருந்து தோன்றி அமைந்தன என்று கூறுவதற்கு இடம் உள்ளது.
சொற்களின் பாகுபாடும் அமைப்பும்
தமிழில் உள்ள சொற்கள் நான்கு வகை; அவற்றுள் உரிச்சொற்கள் என்பவை வழக்கு இழந்தனவாய்ப் பழைய செய்யுளில் உள்ள அடிச்சொற்கள் (roots). அவை நீக்கிப் பார்த்தால் பொருளின் பெயரை உணர்த்தும் பெயர்ச்சொற்கள், தொழிலை உணர்த்தும் வினைச்சொற்கள், இவற்றின் அமைப்பிற்கும் வாக்கிய அமைப்பிற்கும் உதவும் இடைச்சொற்கள் என்ற மூன்றுவகைச் சொற்களே தமிழில் உள்ளன எனலாம்.
பெயர்ச்சொற்கள் திணை பால் எண் இடம் உணர்த்தும். திணை உயர்திணை அஃறிணை என இரு வகை. பகுத்தறிவு உடைய மனிதர் உயர்திணை. மற்றவை - உயிருள்ளவை உயிரில்லாதவை எல்லாம் -