Primary tabs
இன்பமான உதவி வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைம்மாறாக, இந்தப் பசுமையான இடமெல்லாம் உன்னுடையதே ஆகுமாறு, நீ இங்கெல்லாம் மீன்களைக் கவர்ந்து உண்பதற்காகத் தருவேன். தந்த பிறகு, இங்கே உன் பெண் துணையும் நீயுமாக வந்து இனிமையாகத் தங்கி இந்த உலகில் இன்பமாக வாழலாம்” என்கிறார். காதல் நோயால் வருந்தி வாடிய மகளைப்பற்றிக் கவலைப்பட்டுத் தாய் சொல்லும் சொற்களாகவும், மகளின் நோயையும் வாட்டத்தையும்பற்றி அறிந்து குறி சொல்லவல்ல கட்டுவிச்சியின் சொற்களாகவும் அவர் பாடியுள்ள பாடல்களும் கவிதைச் சுவை நிரம்பிய பக்திப் பாடல்களாகும்.
குலசேகரர்
லசேகர ஆழ்வார் சேரமன்னர் குடும்பத்தைச் சோந்தவராக இருந்தும், அந்த அரசச் செல்வத்தையும் உயர்ந்த மானிடப் பிறப்பையும் பொருட்படுத்தவில்லை. அவற்றைவிடத் திருமாலின் திருவேங்கடமலையில் வாழும் பறவையாகப் பிறக்க விரும்புகிறார். “அரம்பையர் சூழ வானுலகத்தை ஆளும் செல்வமும் மண்ணுலகத்து அரசும் யான் வேண்டேன். திருவேங்கட (திருப்பதி) மலையில் ஒரு சுனையில் மீனாகப் பிறக்கும் விதி எனக்கு வாய்க்குமானால் மகிழ்வேன்” என்கிறார்.
திருப்பதி மலையில் ஒரு சிகரமாக, அல்லது ஒரு கானாறாக, அல்லது ஒரு பாதையாக, அல்லது ஒரு படியாக, அல்லது அந்தத் திருமாலின் மலையில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு ஆசைப்பட்டு ஒரு பதிகம் பாடியிருக்கிறார். அது அவருடைய பக்திச் சிறப்பைப் புலப்படுத்துகிற பாசுரம் ஆகும். வித்துவக்கோடு என்னும் தலத்தில் சென்று பாடிய பதிகத்தில் சிறந்த உவமைகளை அமைத்துத் தம் ஈடுபாட்டை விளக்கியுள்ளார். “இறைவனே! உன் திருவடிகள்தவிர எனக்குப் புகலிடம் வேறு இல்லை. பெற்ற தாய் சினம் கொண்டு நீக்கினாலும், அவளுடைய அன்பையே நினைந்து அழும் குழந்தைபோல் இருக்கிறேன். கண்டவர் இகழும் படியாகக் காதலன் செய்தாலும், கொண்டவனைத் தவிர வேறு ஒருவனை நாடாத குலப் பெண்போல் இருக்கிறேன். மருத்துவன் புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அந்த மருத்துவனிடமே தீராத அன்பு வைக்கும் நோயாளிபோன்றவன் நான். கடல் நடுவே ஒரு கப்பலின் பாய்மரத்தில்