தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 199 -

என்பவரால் இயற்றப்பட்டது. இவ்வாறு தலங்களுக்கு எழுதப்பட்ட புராணங்கள் கணக்கற்றவை ஆயின. ஒவ்வொரு தலபுராணத்திலும் அந்தந்தக் கோயிலைச் சிறப்பித்துக் கூறுவதற்காக, இந்திரன் முதலான தேவர்கள் தாம் பெற்ற சாபம் நீங்குவதற்காகவும் பாவம் தீர்வதற்காகவும் அந்த ஊர்க் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ததாகவும் அதற்குப் பிறகே கடவுளின் அருள்பெற்றுக் கடைத்தேறியதாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தந்த ஊரை அடுத்த மலை ஆறு முதலியவை விரிவாக வருணிக்கப்பட்டன. கதைகளும் வருணனைகளும் பெரும்பாலும் ஒரே வகையாக இருப்பது உண்டு.

இத்தனை தலபுராணங்களுள் பலவற்றை இன்று கற்றவர்களும் போற்றிப் படிப்பதில்லை. படிக்கும் இரண்டொரு தலபுராணங்களையும் ஆர்வத்தோடு படிப்பவரைக் காண முடியவில்லை. ஆயிரக்கணக்கான செய்யுள்களை அருமுயற்சி செய்து இயற்றிப் புலவர்கள் தந்த நூல்கள் இந்த நிலைக்கு வரக்காரணம், இவற்றுள் பலவற்றில் இலக்கியக் கலைவிருந்து குறைந்திருப்பதே ஆகும். எங்கள் ஊர்க்கு ஒரு புராணம் வேண்டும், எங்கள் தலைவனுக்கு ஒரு கோவை வேண்டும், ஓர் உலா வேண்டும், ஒரு கலம்பகம் வேண்டும் என்று போட்டியிட்டுக்கொண்டு பல தலபுராணங்களையும் மற்ற நூல்வகைகளையும் இயற்றுமாறு செய்தார்கள் அக்காலத்தார். அவற்றில் இலக்கியப் புதுமை உண்டா, நயம் உண்டா, வாழ்வை ஒட்டிய படைப்பு உண்டா என்று கவலைப்படவில்லை. அந்தத் தலபுராணம் முதலியவற்றுள் ஒன்றுக்கொன்று வேறுபாடு மிகுதியாக இல்லை. ஏறக்குறைய ஒரே வகையான அமைப்பு, ஒரே வகையான செய்யுள் வடிவம், ஒரே வகையான வருணனைகள் என்று பாடினால், ஒரு நூலைப் படித்தவர்கள் மற்றொரு நூலைப் படிக்கும்போது சலிப்பு அடைகிறார்கள். செய்யுள் படித்துப் படித்துப் பொருள் உணர்வதற்கு உரிய பயிற்சிக்கு வேண்டுமானால் படிக்கலாமே தவிர, இலக்கிய நயத்துக்காக, கலைவிருந்துக்காகப் படிக்கத் தேவையில்லாமற்போகிறது. தவிர, பாடிய புலவர்கள் தம் சுற்றுப்புறத்தாரின் வாழ்வை ஒட்டி நடப்பியலாக (realism ஆக)ப் பாடுவதை மறந்து, வெறுங் கற்பனை வேடிக்கையிலும் சொல் விளையாட்டிலும் ஈடுபட்டவர்களாக இருந்து நூல்கள் இயற்றினால், அந்த நூல்கள் ஒரு காலத்தில் ஒருசிலர்க்குப் பயன் தரலாம்; காலம் கடந்து பயன் தருவதோ, பலர்க்கும் இன்பம் அளிப்பதோ முடியாமற்போகிறது. தலபுராணங்கள் முதலியவை இன்று மறுபதிப்புத் தேவை இல்லாமல் போய்விட்டதற்குக் காரணம் இதுவே ஆகும். ஆயினும் அவற்றுள் விரல்விட்டு எண்ணக்கூடிய நூல்கள் சில, இலக்கியச் சிறப்புக் குன்றாமல் இன்றும் விளங்குகின்றன. முழு நூலும் பயனுள்ளதாக இல்லாவிட்டாலும் சில பகுதிகள் சிறந்து நிற்கின்றன. காரணம், அவற்றை




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:03:11(இந்திய நேரம்)