தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 220 -

10. சதகம் முதலியன
(கி. பி. 1700 - 1900)

சதகம்

பத்துப் பத்தாக நூறு பாடல்கள் அமைந்த நூல்கள் பல தமிழில் உண்டு. சங்க காலத்தில் பதிற்றுப்பத்து என்னும் நூல் அவ்வாறு அமைந்தது. பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்ற நூலும் அவ்வாறு அமைந்ததே ஆகும். பத்துப் பத்தாக அமையாமல், மொத்தமாக நூறு பாட்டுப் பாடி அமைப்பதும் உண்டு. அது சதகம் என்னும் வடசொல்லால் குறிக்கப்படும். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பாடிய பாடல்களுள் ஒரு பகுதி திருச்சதகம் என்று பெயர் பெறும். பிற்காலத்தில் தெய்வங்களையும் வள்ளல்களையும் சிற்றரசர்களையும் சிறப்பித்துப் பாடப்பட்ட சதகங்கள் பல உண்டு. 17, 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் சதகங்கள் இயற்றுவதில் ஆர்வம் மிகுதியாக விளங்கியது. சதகங்கள் அக்கறையுடன் படிக்கப்பட்டுவந்தன. திண்ணைப்பள்ளிக்கூடங்களில் சதகம் கற்பது கட்டாயமாக இருந்தது. நீதிகள் பல நல்ல உவமைகளோடு உணர்த்தப்பட்டமையால், சுவை குன்றாமல் இருந்தன. பலரும் கற்பதற்கு உரிய வகையில், அந்த நூல்களின் நடை எளிமையும் ஓட்டமும் உடையதாக உள்ளது. எதுகைமோனைகள் மனப்பாடம் செய்வதற்கு உதவியாக அமைந்துள்ளன. ‘தமிழ்ச் செய்யுள்களின் நடை படிப்படியாக எளிமைபெற்று வளர்ந்த வளர்ச்சியை அந்த நூல்களில் காணலாம். தமிழ்நாட்டின் வரலாற்றை அறியப் பழைய கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன. தமிழ்க் கவிஞர்களும் அறிஞர்களும் வரலாற்றை எழுதிவைக்க முன்வரவில்லை. அந்நிலையில் புலவர் ஒருவர் தாம் வாழ்ந்த நாட்டுப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த பல செய்திகளைத் தொகுத்து ஒரு சதகம் பாடினார். உடனே வேறு புலவர் சிலர் நாட்டின் மற்றப் பகுதிகளின் நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சதகங்கள் பாடினார்கள். தொண்டைமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம், சோழமண்டல சதகம், கொங்குமண்டல சதகம், ஈழமண்டல சதகம், நந்திமண்டல சதகம் முதலியவை அப்படித் தோன்றியவை (தொண்டை மண்டலம் என்பது காஞ்சிபுரத்தைச் சூழ்ந்த பகுதி. ஈழம் என்பது இலங்கை).

அடியார்களின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறுவதில் ஆர்வம் கொண்டார் ஒருவர். அவர் ‘திருத்தொண்டர் சதகம்’ இயற்றினார். நாட்டில்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:09:05(இந்திய நேரம்)