Primary tabs
புரட்டுகளும் பொய்களும் நிறைந்த நீதிமன்றத்தில் செய்த தொழில். அந்தத் தொழிலை விட்டு ஓய்வு பெற்றபோது அவர் பெற்ற மகிழ்ச்சியையும் உற்ற விடுதலை உணர்ச்சியையும் காண்போம். நல்ல எதுகைகள் இயைபுகள் நிரம்பிய எளிய இசைப் பாடலாக அமைந்தது இது:
போதும் போதும் உத்தியோக கனமே - இதில்
ஏது சுகம் நமக்கு மனமே....
எந்த நேரமும் ஓயாத வேலை - இல்லை
என்ன பெற்றோம் முத்து மாலை?
அந்த உத்தியோகமும் ஆலை - அதில்
அகப்பட்ட நாம் கரும்பு போல - போதும் போதும்...
சுப்பையரோ அபத்த மூட்டை - அந்தச்
சுந்தரையர் வழக்கிலே தொள்ளாயிரம் ஓட்டை
அப்பையர் கற்பிப்பார் பொய்ச்சீட்டை - அந்த
அனந்தையர் கட்டுவார் ஆகாசக் கோட்டை
அண்டப் புரட்டன் அந்த வாதி - அகி
லாண்டப் புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி
சண்டப் பிரசண்டன் நியாயவாதி நாளும்
சாஸ்திரப் புளுகன் கட்சிக்காரன் என்னும் கியாதி....
போதும் போதும்
ககனப்பூ வந்திமகன் கொய்தனாம் - அதைக்
கண்டு குருடன் அம்பால் எய்தானாம்
செகமிசை ஊமையனும் வைதானாம் - அதைச்
செவிடன் கேட்டு நகை செய்தானாம்.
வழக்குகளில் உள்ள வன்புதுன்புகளை எளிய சொற்களால் எவ்வளவு தெளிவாகக் கூறிவிட்டார்! இப்படிப்பட்ட பொல்லாத உலகத்தில் சிக்குண்டிருந்தபோதும் கடமையை மிகச் செம்மையாகச் செய்த நேர்மைக்குப் பெயர்பெற்றவராய் விளங்கினார். தம் தொழிலை ஒழுங்காக, நீதியாகச் செய்ய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார் ஒரு பாட்டில். அதுவும் இசைப்பாட்டு.
நானே பொதுநீதி தானே செலுத்திட
நல்ல வரம் அருள் கோனே
வரும் வழக்கர் மனத்தை
வன்சொற்களால் கெடாமல்
மற்றைக் கீழ் உத்தியோகஸ்தர்
வம்புக்கு இடம்கொடாமல்