Primary tabs
அக்கிழமை இதழ்களில் பாரதிதாசன் தலையங்கங்களைக்
கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளார். அவற்றுள் கவிதைத்
தலையங்கங்களைக்காட்டிலும் உரைநடைத் தலையங்கங்களே
மிகுதியாக உள்ளன.
குயில் திங்கள் இருமுறை இதழ் சென்னையிலிருந்து 15-4-1962
முதல் 1.8.62 வரை வெளிவந்தது. மொத்தம் ஏழு இதழ்கள்
வெளிவந்தன. அவற்றுள் ஆறு உரைநடைத் தலையங்கங்கள் இடம்
பெற்றுள்ளன.
இவ்வாறாக வெளிவந்த குயில் இதழ்களில் பாரதிதாசன்
உரைநடையில் எழுதிய தலையங்கக் கட்டுரைகள் அனைத்தையும்
தொகுத்து ‘ உலகுக்கோர் ஐந்தொழுக்கம் ’ ( குயில், கி.இ. 14-1-59,
பொங்கல் மலர் ) என்ற தலைப்பில் இன்று நூலாக வெளிவருகிறது.
பாரதிதாசன் குயில் இதழ்களில் கவிதையிலும் உரைநடையிலும்
எழுதிய தலையங்கங்களைக் குறித்துச் சென்னைப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறையில் பேராசிரியர் முனைவர் பொற்கோ.தலைமையில்
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 1992 ஆம் ஆண்டு எப்ரல்
திங்கள் 22, 23, 24 ஆகிய நாள்களில் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளேன்.
அவ்வாய்வுரை விரைவில் நூலாக வெளிவர இருப்பதால்
விரிவான ஆய்வு இங்கு மேற்கொள்ளவில்லை.
ஆயினும் இந்நூலைப் படிப்பவர்க்குத் துணை செய்யும் வகையில்
சில முதன்மையான செய்திகளைத் தருவது என் கடமையாகின்றது.
1. பாரதிதாசன் தலையங்கக் கட்டுரைகள் பல்வேறு
தன்மையுடையதாகவும் மொழி, இனம், சமூகம், அரசியல், கலைகள்
முதலியகலன்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றன.
2. தமிழின மீட்சிக்கு வழிவகுக்கும் ஒரே இயக்கம் திராவிடர்
கழகம்தான் என்பதை விளக்கி ‘ தொண்டுக்கு இடம் திராவிடர்
கழகம்தான்’என்ற தலையங்கக் கட்டுரையைப் பாரதிதாசன் குயில்
இதழில் ( பி.இ, 9.12.58 ) எழுதியுள்ளார்.