தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tvu



XVIII

தாக்குதலுக்கு     உள்ளாகியுள்ளார். ‘ டயருக்குப்    பரிசு ’ (குயில்,
கி.இ. 31-5-60)

‘குருசாமியைவிட சனார்த்தனமே மானி’ (குயில் கி.இ. 25-10-60)
முதலிய   கட்டுரைகள் குத்தூசி குருசாமியைப் பற்றிய பாரதிதாசனின்
பின்னாளைய கண்ணோட்டத்தைக் காட்டுவன.

5. அரசியல்    இயக்கங்களையும்        அவ்வியக்கங்களின்
தலைவர்களையும்    பாரதிதாசன் கடுமையாகச் சாடியுள்ளார்.

புதுவை,தமிழக மாநிலங்களிலுள்ள அரசியல் வாணர்களையும்
(குயில் கி.இ.4-11-58;23-6-59, 15-7-59; 17-11-59; 17-11-59; 24-11-59;
5-1-60; 12-1-60; 13-9-60; 7-2-61)

நடுவணரசு, மாநில அரசு      அமைச்சர்களையும்   ( குயில்,
கி.இ,15-9-58; 29-9-58; 24-11-59;      15-12-59; 29-12-59; 12-1-60,
13-9-60; 7-2-61,க.தி.இ.15-7-62) திராவிட முன்னேற்றக் கழகத்தையும்
(குயில் கி.இ. 15-3-60, 31-1-61, கு.தி.இ. 1-8-62).

சுதந்திராக் கட்சியையும் ( குயில், கி.இ. 7-7-59 )  நாம் தமிழர்
இயக்கத்தையும்   ( குயில். கி.இ. 1-9-59 ) பாரதிதாசன்  கண்டித்துத்
தலையங்கக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பாரதிதாசன் அரசியல்     இயக்கங்களின்     மீது கொண்ட
வெறுப்புக்கானகாரணங்களைப் பார்ப்போம்.

அரசியல் தலைவர்கள்      சொல்வதொன்றாகவும்  செய்வது
பிறிதொன்றாகவும்        இருக்கின்றனர்  என்பதும் அத்தீயவர்கள்
கனவிலும் மின்னாதவர்கள் என்பதும், மக்களின் குருதியைக் குடித்துக்
கொழுத்துப்போன அட்டைகள் என்பதும் தமிழ், தமிழின நல்வாழ்வு
பற்றிக் கவலைப்படாமல்  தங்கள்        குடும்ப நல்வாழ்வு பற்றிக்
கவலைப்படுபவர்கள் என்பதும் , பதவிக்காகத் தங்கள்  மானத்தையும்
விற்றுப் பிழைக்கும் ஈனர்கள் என்பதும் அரசியல் வாணர்கள் பற்றிய
பாரதிதாசன் கருத்துக்களாகும் .


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:15:14(இந்திய நேரம்)