Primary tabs
எனவே, “இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும்,காட்சியின் தலைவர்
என்று கழறும் ஆட்கள் தாமும், அறங்கொல்பவரே ! தமிழகத்தின்
தலைவர்,என்பவர் தமிழைச் சாகடிக்கப் பின்னிடார், தமிழ்
தொலைப்பார்க்கே தாளம் போடுவர், பொழுது விடிந்து பொழுது
போனால், காசு பறிப்பதே கடனாகக் கொள்வர் ” ( கலை விருந்து
- பொங்கல்மலர் 14-1-82) என்று பாடினார்.
வெற்று ஆரவாரம், பயனற்ற கூச்சல், தன்னலம், ஒழுக்கமின்மை,
ஆடம்பரம், அடிதடி, இவற்றின் கூட்டுக்கலவையே இன்றைய அரசியல்
இயக்கங்கள் என்பது பாரதிதாசன் இறுதி நிலையில் கண்ட முடிவாகும்.
அவருடைய முடிவை நெருப்புப் பொறி பறக்கும் அரசியல்
கட்டுரைகள் பறைசாற்றுகின்றன.
முடிவாகச் சொன்னால், ‘ பாரதிதாசன் ஒரு சுதந்திர எழுத்தாளராக
விளங்கினார்’ எனலாம் .“யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்”
என்பது பாரதிதாசனுக்கு மிகவும் பொருந்தும்.
பாரதிதாசன் குயில் இதழ்களில் உரைநடையில் எழுதிய
தலையங்கக்கட்டுரைகள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்றும் அரசியல் இயக்கங்களைக் குறித்துப் பாரதிதாசன் எழுதிய
கட்டுரைகளைத் தவிர்க்கத் தேவையில்லை என்றும் பாரதிதாசனை
முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு அவை உதவும் என்றும் எண்ணிய
என் கருத்தில் உடன்பட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தார்க்கு
என்றும் நன்றியுடையேன்,
இத்தொகுப்பு நூல் பூம்புகார் பிரசுரம் 1983ஆம் ஆண்டு வெளியிட
முனைந்தது . ‘ பூம்புகார் பிரசுரம் ’ புத்தக வெளியீட்டுப் பொறுப்பினை
ஏற்றிருந்ததிரு .பரதன் அவர்கள் அந்நிறுவனத்தின்று விலகியபின் நூல்
வெளியீடு தடைபட்டது . பதினொரு ஆண்டுகள் கழித்து 1994ஆம்
ஆண்டு இந்நூலுக்கு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூலம் விடிவு
பிறந்திருக்கின்றது .
இதழியல் துறையில் சிறந்த ஆய்வு நூல்களை எழுதியவரும்
ஆய்வாளருக்கு வழிகாட்ட வல்ல ஆசானாக விளங்குபவரும் ஆய்வு