தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 
 
 

இந்நிலையில், தமிழின் உண்மையான வரலாறு வெளிவருவது இன்றியமையாத தாகின்றது. தமிழ்வரலாறு என்னும் பெயரில் இதுவரை வெளிவந்தவை யெல்லாம், பெரும்பாலும் தமிழிலக்கிய வரலாறும் மொழிபற்றிய பொதுவான செய்திகளை எடுத்துக் கூறுவனவுமாகவே உள்ளன. வரலாற்றையும் மொழிநூலையும் தழுவி, முதன்முதலாக வெளிவரும் தமிழ்மொழி வரலாறு இதுவே. நான் சேலங்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியனா யிருந்தபோதே, தவத்திரு மறைமலையடிகள் இதை வெளியிடுமாறு என்னைப் பணித்தார்கள். ஆயினும், அது இதுவரை நிறைவேற வாய்ப்பில்லாது போயிற்று.

ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் அமெரிக்கருமான மேலையர் இற்றை அறிவியல்களில் தலைசிறந்தவரும் வழிகாட்டிகளுமாயிருப்பினும், தமிழர் நண்ணிலக் கடற்கரையினின்று தென்னாடு வந்தவரென்றும், இந்திய நாகரிகம் வேத ஆரியர் கண்டதென்றும், இரு தவறான கருத்துக்கள் அவருள்ளத்தில் ஆழ வேரூன்றியிருப்பதனால், பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், பிற்பட்ட சமற்கிருதத்தை முற்பட்ட தமிழுக் கடிப்படையாக வைத்தாய்ந்து, ஆரிய வெம்மணற் பாலைப்பரப்பில் அலைந்து வந்து வழிதெரியாது மயங்கி, எல்லாமொழிகளும் அறிகுறித் தொகுதிகளே என்றும், ஆயிரமாண்டிற் கொருமுறை மொழிகளெல்லாம் அடியோடு மாறிவிடுகின்றன என்றும், அதனால் மொழித் தோற்றத்தைக் காணமுடியாதென்றும், முடிபுகொண்டு, மேற்கொண்டு உண்மைகாண முடியாவாறு, தம் கண்ணைத் தாமே இறுகக் கட்டிக்கொண்டவர். மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளது என்னும் உண்மையை அவர் உணர்வாராயின், வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம். ஆதலால், அவர் இனிமேலாயினும் தக்கவாறு தமிழில் கவனத்தைச் செலுத்துவாராக.

இற்றைத் தமிழருள்ளும் நூற்றிற் கெண்பதின்மர் அறிகுறிகளும் தாய்மொழியுணர்ச்சி யில்லாதவருமா யிருப்பதனாலும், ஆங்கிலங் கற்றாருட் பெரும்பாலார் தமிழிலக்கியங் கல்லாமையாலும், கல்லூரிகளில் தமிழாசிரியப் பணிசெயப் புகும் இளைஞரும் தமக்குள்ள தமிழ்ப்பற்றை விளக்குமாறு பல்கலைக்கழகச் சூழ்வெளி ஆரியவணுக்கள் நம்பியிருப்பதனாலும், அரசியற் கட்சிகளுள் தி. மு. க. தவிர ஏனைய வெல்லாம் இந்தியை யேற்றுத் தமிழைப் புறக்கணிப்பதாலும், இன்று தமிழப்பண்பாட்டைப் பெரும்பாலும் தாங்கிநிற்கும் உயர்நிலைத் தமிழரான உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும், புதுத்தலை முறையாக முளைவிட்டுக் கவர்ந்தெழும் மாணவமணிகளும், புலவர்கல்லூரிகளிலும் மழபுலவரும், பட்டம்பெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி யிளைஞரும், இதைக் கருத்தூன்றிப் படித்து, செந்தமிழின் கூர்மதிநுட்பத்தையும் உணர்ந்து, தம்மை உணர்த்துவதுடன் தமிழையும் உலகமுழுதும் பரப்புவாராக.

இந்நூலைச் செவ்வையாக அச்சிட்டுத்தந்த, அச்சக உரிமையாளர் திரு. மு. நாராயணன் செட்டியார் அவர்கட்கு, தமிழுலகனைத்தும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:39:04(இந்திய நேரம்)