தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Vilaiyadu


xiv

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

யடிகளை வழிகாட்டியாகக் கொண்டு பாவாணர் எடுத்த முயற்சியின் விளைவால் வடமொழியை அறவே களைந்து எறிந்துவிட்டு, முற்றிலும் தனித்தமிழிலே எழுத முடியும் பேச முடியும் எனும் நிலையை எட்டிவிட்டோம்.
ஆனால் இன்று மற்றொரு நோய் நம்மைப் பிடித்து ஆட்டுகிறது. ஆம்! ஆங்கிலம் கலந்து எழுதுவது, ஆங்கிலம் கலந்து பேசுவது என்ற ‘தமிங்கில‘ப் போக்கு மிகுதியாகிவிட்டது. எனினும் ஆங்கிலக் கலப்பினை எளிதில் நீக்கிவிடமுடியும்.
‘தமிழில் வடமொழிக் கலப்பு என்பது பாலில் தண்ணீர் கலந்ததற்கு ஒப்பாகும்; பாலிலிருந்து தண்ணீரைப் பிரிப்பதுதான் கடுமையாகும்; எனினும் அதையே எளிதாகச் செய்துவிட்டோம்.
தமிழில் ஆங்கிலக் கலப்பு என்பது தண்ணீரில் எண்ணெய் கலந்ததற்கு ஒப்பாகும்; இதனை எளிதில் பிரித்துவிட முடியும்.
கொஞ்சம் பொறுப்புணர்ச்சி இருந்தால் போதும்; பிறமொழிக் கலப்புப் பின்னங்கால் பிடரியில்பட ஓடிவிடும்; இதற்கு மிகவும் தேவை, தாழ்வு மனப்பான்மையை அறவே நீக்கிக்கொள்வதுதான். ஆங்கிலத்தில் சில சொற்களையாவது பேசினால்தான் மதிப்பு என்றும், அப்போதுதான் படித்தவர் வரிசையில் சேரமுடியும் என்றும் ‘தமிழர்கள்‘ எப்போது கருதத் தொடங்கினார்களோ அப்போதே நேர்ந்தது கேடு.
நம் மொழி உயர்ந்தது; நாம் யார்க்கும் அடிமையாக இல்லை; அடிமையாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை என்று துணிந்து எழுந்தால் பாவாணர் கொள்கை நிறைவேறும்.

"தாழ்வுணர்ச்சி நீங்கும் தகைமைக்கண் தங்கிற்றே
வாழ்வுணர்ச்சி காணும் வழி"
இது பாவாணர் எனக்களித்த "சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடுகள்"எனும் நூலில் அவர் தம் கைப்பட எழுதியது.
‘தமிழால் முடியும்‘ எனும் நம்பிக்கையும் ‘தமிழில்தான் எல்லாம்‘ எனும் முனைப்பும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்துவிட்டால் தாழ்வுணர்ச்சிக்கு ஏது இடம்?
1940-ல் பாவாணரால் எழுதப்பட்ட ‘ஒப்பியன் மொழிநூலி‘லிருந்து தொடங்கி அவரது எத்தனையோ படைப்புகள் வந்துவிட்டன. எத்தனையோ ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். பாவாணரது நூல்கள் அனைத்தையும் படித்தறிந்த தோழர்கட்கு அவர் தந்த முடிவுகள் தெரியும்.
குமரிக்கண்டம் (Lemuria) பற்றிப் பலர் எழுதியிருப்பினும் பாவாணர் வரலாற்று நோக்கில் முழுமையாக ஆராய்ந்து "குமரிக்கண்டம்தான் தமிழன் பிறந்தகம்" என்ற உண்மையை நிலைநாட்டியுள்ளார். "Lemuria is the Cradle of Mankind" என்று எக்கேல் கூறியதையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும்.
கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றும் பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெற வேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார். அவர்வழி நின்றொழுகும் எனக்குத் தமிழ் வழிபாட்டுக்குரிய 22 போற்றி நூல்களை வெளியிடும் வாய்ப்புக் கிட்டியமை குறித்து மகிழ்கிறேன்.
‘பொதுவாகத் தமிழ் இலக்கிய வரலாறு‘ எழுதுபவர்கள் தொல்காப்பியம், கழக இலக்கியங்கள் தொடங்கி, இக்கால இலக்கிய வகைகளான ‘நாடகம்,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:14:15(இந்திய நேரம்)