தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Vilaiyadu


பாவாணரைப் போற்றும் பார்
xv
உரைநடை, புதினம், சிறுகதை, கவிதை‘ என்பவைவரை விரிவாக எழுதி முடிப்பர். இக்காலப் புதுக்கவிதையார்கள் பற்றியும் விரிவான செய்திகள் இடம்பெறும். ஆனால் பாவாணர் எழுதிய வரலாற்று நூலில் சில புதுமைகள் உள்ளன. வையாபுரிப் பிள்ளை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் தொடங்கி, பின்னர் வெளிவந்த ‘சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி‘ போன்றவை தமிழுக்கு ஆக்கம் சேர்க்காதவை; ஒதுக்கப்பட வேண்டியவை என்று எழுதுகிறார்.

பொதுவான இலக்கிய வரலாற்றில் வையாபுரிப் பிள்ளையின் பணி அவர் படைத்த நூல்கள்பற்றிய குறிப்புகள் மட்டுமே இடம்பெறும். ஆனால் பாவாணர் நூல் அந்த கோணத்தில் செல்லவில்லை. நச்சு எழுத்து எதுவாயினும் எந்தச் சூழலிலும் துணிந்து கண்டிக்கும் - சுட்டிக் காட்டும் பண்பு பாவாணர்க்கு உண்டு என்பதையே இது காட்டுகிறது.

வடமொழி வல்லாண்மையை ஒழித்துக் கட்டுவதில் முனைப்பாக இருந்த பாவாணர், வடமொழியாளர்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தார்கள் என்பதையும் சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றார்.
பரிதிமாற் கலைஞர் எனும் வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் ஒரு கருத்தை வெளிப்படுத்தினார். வடவர், தமிழ்நூல்கள் பலவற்றைத் தம் மொழியில் மொழிபெயர்த்துக்கொண்டு, பின்னர் மூலநூல்களை அழித்துவிட்டனர் என்றார். இந்தக் கருத்தை வலிமையாகப் பற்றிக்கொண்ட பாவாணர், விரிவான கருத்துகளை வெளியிட்டதுடன் ‘பேரன் பாட்டனைப் பெற்றான்‘ என்பதுபோல் வடமொழியாளர் போலியாகப் புலம்புகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அவருடைய நம்பிக்கைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று உள்ளது. "தாம் எழுதிய சில நூல்கள் மட்டும் வெளிவந்து விட்டால், தமிழர்கள் தெளிவு பெற்று விடுவார்கள் என்றும், தமிழ்நாடே மாறிப் போய்விடும் என்றும்" அவர் நம்பினார்.
அவர் கருதியவாறே அந்த நூல்களும் வெளிவந்துவிட்டன. அரசும் உருபா 20 இலட்சம் பரிபுத் தொகையாக வழங்கி, அவரது நூல்களை நாட்டுடைமையாக்கிவிட்டது. இன்ன பதிப்பகத்தார் வெளியிட முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டுகளெல்லாம் நீங்கி, யாரும் வெளியிடலாம் எனும் நிலை வந்துவிட்டது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சில நூல்களை வெளியிட்டது. தற்போது நண்பர் இளவழகன் அனைத்துப் படைப்புகளையும் வெளியே கொண்டுவந்துவிட்டார்.
பாவாணர் எதிர்பார்த்தபடி தமிழர்கள் தெளிவடைந்து விட்டார்களா? திருந்திவிட்டார்களா? தமிழ்நாடே மாறிப் போயிவிட்டதா? அனைவரும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்றே சிந்திக்கவும் செயற்படவும் தொடங்கிவிட்டார்களா?
தமிழில் கையொப்பமிடுங்கள் என்று ‘ஆணை‘ பிறப்பித்தும் இன்றுவரை அரசு ஊழியர்களில் 50%-க்கு மேல் தமிழில் கையொப்பம் இடுவதில்லையே‘
பாவாணர் நூல்களின் தாக்கம் எங்கே? இன்றும் அவருடைய ஏக்கம் அப்படியே நிற்கிறது.
பாவாணர்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மறைமலையடிகளார் காலத்தில் ‘தனித்தமிழ் இயக்கம்‘ தொடங்கப்பட்டுப் பல நண்பர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டனர். ‘க.ப.சந்தோஷம்‘ மகிழ்நன் ஆனார். நெடுஞ்செழியன், செழியன், அன்பழகன், அரங்கண்ணல், புலமைப்பித்தன், தமிழ்க்குடிமகன் என்று பல பெயர்கள் மாற்றம் பெற்றதால் ஏற்றம் பெற்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:14:28(இந்திய நேரம்)